Wednesday, 01 July 2026, 03:31 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

சென்னையில் சாலை விதிமீறலுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியோடு தானியங்கி மூலம் அபராதம்

Published On: 2026-06-26 18:41:03 | Reporter: Admin

News Image

சென்னை மாநகரில் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியோடு, சாலை விதிமீறலுக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் ஜப்பான் நிதியுதவியில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் 70 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு 6 மாதத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் திட்டத்துக்கான சிறப்பு கட்டுப்பாட்டு அறை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மாநகர சாலைகளில் அதிவேகமாக செல்வோர், சிக்னல் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் என போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறிய நவீன சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் உதவியோடு தானியங்கி முறை மூலம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7