Wednesday, 01 July 2026, 04:49 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 18:17:05 | Reporter: Admin
ஸ்விட்சர்லாந்து, கனடா, போஸ்பியா வீரர்கள். - படங்கள்: ஏபி கால்பந்து உலகக் கோப்பையில் ஒரே குரூப்பில் இருக்கும் 3 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது. வழக்கமான டாப் 2 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலையில், மூன்றாம் நிலையில் இருக்கும் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த உலகக் கோப்பையில் 48 அணிகள் விளையாடுகின்றன. இதில் 12 குரூப்புகள் இருக்கின்றன. இதில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) முன்னேறுகின்றன. 16 அணிகள் தொடரிலிருந்து வெளியேறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் (குரூப்) டாப் 2 அணிகள் முதலில் தேர்வாகும். அதன்படி 24 அணிகள் தேர்வாக, மீதமிருக்கும் 8 அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாமிடத்தில் இருக்கும் அணிகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற அணிகள் தேர்வாகுமென ஃபிஃபா தெரிவித்துள்ளது. இந்த விதியின்படி, குரூப் பி பிரிவில் ஸ்விட்சர்லாந்து, கனடா, போஸ்னியா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கனடா, போஸ்னியா ஆகிய அணிகள் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் கோல்கள் வித்தியாசத்தில் கனடா (5) முன்னிலை வகித்தது. மூன்றாமிடத்தில் இருக்கும் அணிகளில் போஸ்னியா ஏன் தேர்வானது? மொத்தம் இருக்கும் 12 குரூப்புகளில், தற்போதைக்கு மூன்றாமிடத்தில் இருக்கும் அணிகளில் போஸ்னியா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதால் அந்த அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது. இதே விதிமுறைகளின்படி மீதம் 7 அணிகள் தேர்வாகவிருக்கிறது. ஒருவேளை பல அணிகள் ஒரே புள்ளிகள் இருந்தால், எந்த அணி அதிக கோல்கள் அடித்துள்ளதோ, அந்த அணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென ஃபிஃபா விதிமுறைகள் கூறுகிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.