Wednesday, 01 July 2026, 04:40 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

200 யூனிட் இலவசம்..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவி்ப்பு

Published On: 2026-06-26 18:06:06 | Reporter: Admin

News Image

TANGEDCO White Paper: மின்சாரத் துறையில் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிறைவேற்றப்படும் என, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மின்சாரத் துறையில் உள்ள குறைகள்,பிரச்னைகள், பணியாட்கள் பற்றாக்குறை, முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் தொடர்பான விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்து இருந்தார். அதன்படி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நடப்பாண்டில் 3.57 சதவிகிதம் அளவிற்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், நான் அந்த கோப்பில் கையொப்பமிடப்போவதில்லை” என அறிவித்தார். இதன் மூலம், கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் ஜுலை மாதம் 1ம் தேதியும் உயர்த்தப்பட்ட வந்து மின்சார கட்டணம் நடப்பாண்டு உயர்த்தப்படாது என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், 500 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு, முதல் 200 யூனிட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் மின்சார வாரியத்தில் நிரப்பப்படாமல் விட்ட காலிப்பணியிடங்கள் தொடர்பாகவும் அமைச்சர் நிர்மல் குமார் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தரவு (2000–2026) அதிமுக - திமுக ஆட்சியில் நிரப்பிய பணியிடங்களின் விவரங்கள் அதாவது கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வு பெற்ற 6 ஆயிரத்திற்கும் அதிகமான மின்சாரத்துறை ஊழியர்களின் காலிப்பணியிடங்களில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதேநேரம், நடப்பாண்டு இறுதிக்குள் மின்சார வாரியத்தில் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் உறுதியளித்துள்ளார். மின்சாரத்துறை மொத்தமாக நான்கு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மொத்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 635 ஆகும். ஆனால் தற்போது 74 ஆயிரத்து 714 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65 ஆயிரத்து 921 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு தொடங்கி 2026ம் ஆண்டு வரை அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி செய்த நிலையில், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகால இடைவெளியிலும் மின்சாரத்துறையின் வரவு, செலவு தொடர்பான விவரங்களையும் அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி,

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7