Wednesday, 01 July 2026, 05:38 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

”த்ரிஷா படத்தை மாட்டுங்க”.. கவுன்சிலர் செயலால் பரபரப்பு.. மாமன்ற கூட்டத்தில் மோதல்!

Published On: 2026-06-26 18:03:07 | Reporter: Admin

News Image

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் மாநகராட்சி கூட்டங்களில் தலைவர்களின் புகைப்படங்களை வைப்பதில் மோதல் நடந்து வருகிறது. CM விஜய் படத்தை மாட்டியுள்ள நிலையில் ஸ்டாலின் படத்துடன் திமுகவினரும், EPS படத்துடன் அதிமுகவினரும், காமராசர் படத்துடன் காங்கிரஸ் கட்சியினரும் மோதி வருகின்றனர். அந்தவகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் தனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை என்று கூறி தான் அளித்த மனுக்களுடன் மேயர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது முன்னாள் முதல்வர் இபிஎஸ் புகைப்படத்தை அதிமுகவினர் கூட்ட அரங்கில் மாட்டினர். அதனால் திமுகவினரும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்ட முயன்ற போது மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் வைக்கப்பட்டது. கூட்ட அரங்கமே கூச்சல் குழப்பமாக இருந்த போது, சுயேட்சை கவுன்சிலரான மெய்யர் த்ரிஷா படத்தை வைத்தே ஆக வேண்டும் என சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவர் தான் என சொல்லி படத்தை மாட்ட சொன்னது விவாதமாக மாறியுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7