Wednesday, 01 July 2026, 05:34 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 17:58:07 | Reporter: Admin
தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 300 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு அதன் சேவைகள் தொடங்கப்படாமலே இருந்தது. இந்த சூழலில், அந்த புதிய பேருந்துகளின் சேவையை இன்று முதலமைச்சர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, தலைமைச் செயலகத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய் அதே பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் கலங்கரை விளக்கம் வரை பேருந்தில் சென்று ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பான அந்த சாலையின் ஒரு பக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சில வாகன ஓட்டிகள் ஆவேசப்பட்டு அங்கிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், பேருந்தில் பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் விஜய் பேருந்தில் இருந்து மக்களை தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….Wait பண்ணுங்க மக்களே…என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க? 6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது அப்போ புரியல…இப்போ புரியுது!#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் pic.twitter.com/gvgXqVBwlC பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் மக்களை வீடியோ எடுத்தும், கை காட்டி சென்றதையும் சாலையில் வெயிலில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதையும் ஒப்பிட்டு அதிமுக கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அவர்களது ஐடி பிரிவின் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ரீல்ஸ் எடுக்கனும் வெயிட் பண்ணுங்க மக்களே என்ற விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் மேல், முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….Wait பண்ணுங்க மக்களே… என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க? 6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல? “அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது அப்போ புரியல… இப்போ புரியுது! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளனர். நீண்ட நாட்களாக இந்த பேருந்துகளின் சேவை தொடங்கப்படாமலே உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் மத்தியில் இந்த பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்துள்ளார்.