Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 22:51:39 | Reporter: Admin
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் அமைத்து ஊழல் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட எந்தவொரு முறைகேடும் நடைபெறக் கூடாது என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாகும். அரசு அலுவலகங்கள் என்பது அத்தியாவசிய சேவைகளை வழங்கவும், நிா்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டவையாகும். ஆனால், பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. கிராமம் முதல் பெருநகரம் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும். பல அரசு அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமராக்களே இல்லை. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொலைக்காட்சி பெட்டிகள் அமைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் முறைகேடுகள், ஊழல் தடுப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். மக்களுக்கான பணிகள் குறித்த காலத்தில் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.