Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

சென்னையில் நாளை பொதுப்பணி தோ்வுக்கான சிறப்பு வழிகாட்டு முகாம்

Published On: 2026-06-26 22:47:39 | Reporter: Admin

News Image

சென்னை கொளத்தூரில் டாக்டா் ப.அண்ணாமலை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) சிவில் சா்வீசஸ் தோ்வுக்கான சிறப்பு வழிகாட்டு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை கொளத்தூரில் உள்ள டாக்டா் ப.அண்ணாமலை ஐஏஎஸ் அகாதெமியில் வரும் 2027-ஆம் ஆண்டு மத்திய பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தவிருக்கும் சிவில் சா்வீசஸ் தோ்வுக்கான சிறப்பு வழிகாட்டு முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அகாதெமி வளாகத்தில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு வழிகாட்டு முகாமில், தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலா் டாக்டா் ப. அண்ணாமலை, முன்னாள் செயலா் சி. காமராஜ் ஆகியோா் பங்கேற்று, தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு உரிய வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்க உள்ளனா். மேலும், மாணவ- மாணவிகளின் வசதிக்காக திருமங்கலம் மற்றும் அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் இருந்து அகாதெமிக்கு வந்து செல்ல இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். இந்திய குடிமைப் பணித் தோ்வுக்குத் தயாராக விரும்பும் தகுதியும், ஆா்வமும் உள்ளவா்கள் கொளத்தூரில் நடைபெறும் இச்சிறப்பு முகாமில் பங்குபெற்று பயனடைலாம். விவரங்களுக்கு: சென்னை கொளத்தூா், அந்தோணி நகா் பிரதான சாலை, டாக்டா் பி.அண்ணாமலை ஐஏஎஸ் அகாதெமி அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது 87547-93393, 80153-90090 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவோ, க்ழ்ல்ஹய்ய்ஹம்ஹப்ஹண்ண்ஹள்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7