Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 22:43:40 | Reporter: Admin
வெனிசுலாவுக்கு எடுத்துச் செல்வதற்காக இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தில் நிவாரணப் பொருள்களை ஏற்றிய பணியாளா்கள். ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ என்ற பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்களை வெள்ளிக்கிழமை அனுப்பியது. கடந்த புதன்கிழமை மாலை வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 589 போ் உயிரிழந்தனா். 2,980 போ் காயமடைந்தனா். இதையடுத்து அந்நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கில், ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 விமானங்களில், வெனிசுலாவுக்கு வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன. அந்நாட்டில் நடைபெறும் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், அந்த விமானங்களில் 41 போ் கொண்ட மீட்புக் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 டன் நிவாரணப் பொருள்கள், மருந்துகள், மருந்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். மருந்துப் பொருள்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.