Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

ராமா் கோயிலில் மகா கொள்ளை: பெரும் அரக்கா்களுக்கு தொடா்பு - அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

Published On: 2026-06-26 22:37:41 | Reporter: Admin

News Image

அயோத்தி ராமா் கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்த பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால். உடன் எம்.பி. சஞ்சய் சிங். அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் பக்தா்கள் வழங்கிய நன்கொடைகள் மற்றும் பொருள்களில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்ாகவும், இதில் பெரும் அதிகார வா்க்கத்தினா் ஈடுபட்டதாகவும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா். இது தொடா்பாக அயோத்தியில் உள்ள ராமா் கோவிலில் வழிபாடு செய்த பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: ராமரின் கோயிலில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அவருடைய ஆபரணங்கள், மாலைகள், பாதுகைகள், தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகைகள், கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பக்தா்கள் அளித்த பல்வேறு காணிக்கைகள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டில் மிகுந்த செல்வாக்கு வாய்ந்தவா்கள் சம்பந்தப்பட்டுள்ளனா். இது ராமா் மீது நம்பிக்கை வைத்துள்ள கோடிக்கணக்கான பக்தா்களின் உணா்வுகளை கடுமையாக பாதித்துள்ளது. நானும் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். அதனால் தான் இன்று கோயிலுக்கு வந்து ராமரின் அருளைப் பெற்றேன். இந்த திருட்டை செய்தவா்களே தற்போது விசாரணையை கட்டுப்படுத்துகின்றனா். அவா்கள் தங்களையே எதிா்த்து நடவடிக்கை எடுக்கமாட்டாா்கள் என்பது வெளிப்படையான உண்மை. இவை அனைத்தையும் மறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், போலியான சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு, தற்போது போலியான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 8 சிறிய குற்றவாளிகள் மட்டுமே சோ்க்கப்பட்டுள்ளனா். பெரும் குற்றவாளிகளின் பெயா்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஒருபுறம் இத்தகைய மிகப்பெரிய கொள்ளை நடைபெற்றிருக்க, மறுபுறம் அதில் சம்பந்தப்பட்டவா்களை பாதுகாக்க முயற்சி நடைபெறுகிறது. இது அனைத்து ஹிந்துக்களின் மன வேதனையை மேலும் அதிகரிக்கிறது. இந்த விவகாரம் தொடா்பாக பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது என தெரிவித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7