Tuesday, 30 June 2026, 09:42 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

மியான்மரில் ரூ.5,600 கோடி போதைப்பொருள் எரிப்பு

Published On: 2026-06-26 22:34:41 | Reporter: Admin

News Image

தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ல், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின், அங்கு ராணுவ அரசுக்கும், ஜனநாயக ஆதரவாளர்கள் மற்றும் பழங்குடியின ஆயுதமேந்திய குழுக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த சூழலை பயன்படுத்தி, மியான்மரில் போதைப்பொருள் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. ராணுவம் நடத்திய அதிரடி சோதனையில், நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஓராண்டில் ஹெராயின், கெட்டமைன், மெத் ஆம் பெட்டமைன், கிரிஸ்டல் மெத், கஞ்சா உள்ளிட்ட, 5,661 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவை, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி எரித்து அழிக்கப்பட்டன.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7