Tuesday, 30 June 2026, 09:42 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

600 ‘ட்ரோன்’களை வீசி ரஷ்யாவை முதன்முறையாக தாக்கிய உக்ரைன்

Published On: 2026-06-26 22:33:41 | Reporter: Admin

News Image

மாஸ்கோ: போர் துவங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில், மிகப்பெரிய, ‘ட்ரோன்’ தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நடத்தி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேல் போர் நடக்கிறது. இந்நிலையில், ரஷ்யா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா உள்ளிட்ட பகுதிகளை இலக்காக வைத்து, 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீசி மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தி உள்ளது. இவற்றில் பெரும்பாலான ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா நடத்திய பதில் தாக்குதலில் இருவர் பலியானதாகவும், அந்நாட்டின், 189 ட்ரோன்களில், 174 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. எனினும், ரஷ்யாவின், ‘இஸ்கந்தர் – எம்’ பாலிஸ்டிக் ஏவுகணைகளில் நான்கு, வான் பாதுகாப்பை மீறி உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7