Wednesday, 01 July 2026, 02:32 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 22:31:41 | Reporter: Admin
புதுடில்லி: இரட்டை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு உதவும் வகையில், 'ஆப்பரேஷன் அமிஸ்தாத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. நம் விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில், 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுடன் 41 பேர் அடங்கிய மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த 24ம் தேதி இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட் டன. தலைநகர் கராகசுக்கு மேற்கே, மொரோன் கடற்கரை பகுதிக்கு அருகே, 39 வினாடிகள் இடைவெளியில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவும் பதிவானது. இதில், கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகள் அதிகளவு சேதமடைந்து உள்ளன. நகரின் முக்கிய கட் டடங்கள், அடையாளங் கள் சரிந்து விழுந்து இடி பாடுகளின் குவியல்களாய் காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில் சாலைகளில் பெரிய அளவு பள்ளம் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்கு வரத்து முடங்கியுள்ளது. சம்பவ இடங்களில் இரவு, பகலாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின்படி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே உறுதியளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, வெனிசுலா நாட்டு மக்களுக்கு உதவ, 'ஆப்பரேஷன் அமிஸ்தாத்' திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. ஸ்பானிஷ் மொழியில் 'அமிஸ்தாத்' என்றால் நட்பு என்று பொருள். எனவே, இந்த நிவாரண நடவடிக்கையானது, வெனிசுலாவுடன் இருதரப்பு உறவுகளை மதிப்பதிலும், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், நம் நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'ஆப்பரேஷன் அமிஸ்தாத்' தொடங்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்துக்கு பிந்தைய நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், அவசர உதவிகளுடன் நம் விமானப் படையின் இரண்டு 'சி 17' ரக விமானங்கள் வெனிசுலாவுக்கு புறப்பட்டன. இந்த உதவியில், நம் ராணுவத்தின் கள மருத்துவமனை பிரிவு மற்றும் 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கும். நெருக்கடியான நேரத் தில், வெனிசுலா அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் ஆதரவளிக்க இந்தியா உறுதியுடன் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ குழு உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானத்தில், ராணுவத்தைச் சேர்ந்த ஒன்பது மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பணியாளர்கள் அடங்கிய குழுவும் வெனிசுலா சென்றுள்ளன. வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட 6 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களும் இந்த விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கத்தார், பிரேசில், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா வுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.