Thursday, 02 July 2026, 05:14 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

போதைப்பொருள் சர்ச்சை அமைச்சர் சரத்குமார் மறுப்பு

Published On: 2026-06-26 22:27:41 | Reporter: Admin

News Image

சென்னை: ''நான் பயன்படுத்தியது போதைப்பொருள் இல்லை ,'' என, தன் குடும்பத்துடன், அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, 'விளையாட்டை எடு; போதையை விடு' என, மாரத்தான் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், முதல்வர் விஜய் பங்கேற்று ஓடினார். இந்நிலையில், தமிழக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கிரிக்கெட் போட்டி பார்க்க சென்றபோது, கேலரியில் அமர்ந்து 'போதைப் பொருள் போன்ற, வெள்ளை நிற பவுடரை, மொபைல் போனில் தட்டி, அதை ஏ.டி.எம்., கார்டு உதவியுடன் பிரிப்பதும், அதை சுருட்ட மறுகையில் 500 ரூபாய் நோட்டுடன், அவர் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. அந்த வீடியோவை, சரத்குமார் தன் இன்ஸ்டாகிராமில், 'தக் லைப்' என்ற பெயரில், நெருங்கிய நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அமைச்சரே போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளார் எனக்கூறி, இந்த வீடியோ வேகமாக பரவியது. அதை தொடர்ந்து, அமைச்சர் சரத்குமார், தன் மனைவி, மகளுடன் ஒரு வீடியோ வெளியிட்டார். போதை ஒழிப்பு தொடர்பாக, விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, காலையில் சென்று வந்தேன். அதன்பின், ஒரு பொய்யை பரப்பி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐ.பி.எல்., விளையாட்டை பார்க்க, குடும்ப நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த சமயத்தில் 'என் மகள் மாத்திரை சாப்பிட மாட்டாள்; துப்பிவிடுவாள் என்பதால், தண்ணீரில் கலந்து பாப்பாவுக்கு கொடுக்க வேண்டும்' என, என் மனைவி கூறினார். அப்போது ஒரு மாத்திரையை நொறுக்கி கொடுத்தோம். அது, போதை மாத்திரை என, 'வீடியோ' வெளியாகி உள்ளது. இது என் மனதுக்கு ரொம்பவே கஷ்டமான சூழ்நிலையாக உள்ளது. மைதானத்தில் அவ்வளவு கூட்டத்தில், போலீஸ் பாதுகாப்போடு, போதைப் பொருளை பயன்படுத்த முடியாது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7