Thursday, 02 July 2026, 05:07 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

பேனரில் 2வதாக பெயர்; கலெக்டருடன் பெண் மந்திரி வாதம்

Published On: 2026-06-26 22:23:42 | Reporter: Admin

News Image

விருதுநகர்: விருதுநகரில், சமூக நலத்துறை சார்பில் சிலம்ப விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்காக, மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி பெயர் இரண்டாவதாக இடம் பெற்றிருந்தது. முதலாவதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் அச்சிடப்பட்டிருந்தது. விழா நடந்து கொண்டிருந்த போதே, அமைச்சர் ஜெகதீஸ்வரி, 'நிகழ்ச்சிக்கு வராத, துறைக்கு தொடர்பு இல்லாத ஒருவரின் பெயரை முதலில் போட்டிருப்பது என்ன நியாயம்? நான் வேண்டுமானால் சென்று விடவா?' என கேள்வி எழுப்பி, கலெக்டர் சுகபுத்ராவுடன் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ' நான் தானே இம்மாவட்ட பொறுப்பு அமைச்சர். அதிகாரிகள் தொடர்ந்து இதே தவறை செய்கின்றனர்' எனக்கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கடிந்து கொண்டார். மாவட்டத்தில், சில நாட்களாகவே த.வெ.க.,வில் இரு பெண் அமைச்சர்களுக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. தற்போது அரசு விழாவில் அதிகாரிகள் முன்னிலையில் அம்பலம் ஆகியுள்ளது. முதல்வர் விஜய் பிறந்த நாள் விழாக்களை, இருவரும் தனித்தனியாக நடத்தினர். சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேனர் கிழிக்கப்பட்டது. அமைச்சர் ஜெகதீஸ்வரி, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருபவர். ஆனால், கீர்த்தனா அரசியல் ஆலோசகராக இருந்ததால், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மூலம் எம்.எல்.ஏ., சீட் பெற்றவர் என்பதால், உள்ளூர் நிர்வாகிகளை மதிப்பதில்லை என, கட்சியினரிடமும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இருப்பினும், கட்சியில் சீனியர் என்றாலும், அரசு புரோட்டோகால்படி முதல்வருக்கு அடுத்து அமைச்சரவை வரிசையில் கீர்த்த னாவுக்கு, 10வது இடமும், ஜெகதீஸ்வரிக்கு, 23வது இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனா ல், மாவட்ட நிர்வாகம் புரோட்டோகால் பின்பற்றி பெய ரை அச்சடித்திருந்தது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட் டது. மயங்கி விழுந்த ஜெகதீஸ்வரி பரிசு வழங்கும் விழாவை முடித்துக்கொண்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தாய் - சேய் நல பெட்டகம் வழங்கும் விழாவில், அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றார். பெட்டகம் வழங்கிக்கொண்டிருந்த அவர், சர்க்கரை சத்து அதிகமானதால் மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனையிலேயே ஒரு மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7