Wednesday, 01 July 2026, 03:49 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?

Published On: 2026-06-26 22:15:43 | Reporter: Admin

News Image

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே அமைந்துள்ளது ஓடக்கரை. இந்த பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். அப்போது, அவரிடம் அப்போது கோரிக்கை வைத்த மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தே நிற்கவில்லை. எதற்காக பேருந்து நிறுத்தம் என்று ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர். மேலும், பேருந்தை நிறுத்தச் சொல்லியும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், எங்க முதலமைச்சராக இருந்தால் பண்ணியிருப்பேன் என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். கனிமொழியின் பேச்சில் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக எம்எல்ஏ-தானே? கோரிக்கையை நிறைவேற்றலாமே? என்று கோரிக்கை விடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதே பேருந்து நிறுத்தத்திற்கு இன்று அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கனிமொழியிடம் கோரிக்கை வைத்த பெண்கள் அமைச்சர் ஸ்ரீநாத்திடமும் பேருந்தை நின்று செல்ல உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, போக்குவரத்து அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அழைத்த அமைச்சர் ஸ்ரீநாத் ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிட்டார். மேலும், தான் 3 நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு ஆய்வுக்கு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்தனர். ஓடக்கரை பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நின்று செல்லாமல் இருந்ததால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளி - கல்லூரிக்கு செல்பவர்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த சூழலில், தற்போது பேருந்து நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7