Wednesday, 01 July 2026, 03:48 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

IND vs IRE: வைபவ் சூர்யவன்ஷி இன்று விளையாடவில்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்.. டாசில் ஸ்ரேயாஸ்க்கு சாதகம்

Published On: 2026-06-26 22:04:43 | Reporter: Admin

News Image

பெல்ஃபாஸ்ட்: இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். டாஸ் வென்ற பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்த ஆடுகளம் தங்களுக்கு முற்றிலும் புதியது என்றும், பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் விளையாடிய அனுபவம் இல்லை என்றும் கூறினார். இதனால் முதலில் பந்துவீசத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார். மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களை தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இத்தொடரில் அனைவரின் கவனமும் 15 வயதான இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மீது உள்ளது. அவர் இன்று அறிமுகமாக வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அவர் அறிமுகமாகவில்லை என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் மற்றும் இலங்கை ஏ தொடர்களில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் காட்டிய அதிரடி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பலமாக உள்ளனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முக்கியப் பங்கு வகிப்பார்கள். அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்து பேசிய அயர்லாந்து கேப்டன் டக்கர், தாங்களும் முதலில் பந்துவீச தான் இருந்தோம். ஈடுகளம் நன்றாக இருக்கிறது. எங்கள் அணியின் தலைமை பொறுப்பில் நடந்த மாற்றம் இயற்கையாகவே அமைந்தது. பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறோம். சொந்த மண்ணில் விளையாடும் அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியின் கேப்டன் லோர்கன் டக்கர் மற்றும் ஹாரி டெக்டர் ஆகியோர் பேட்டிங்கில் வலுவான வீரர்களாக உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் காரெத் டெலானி மற்றும் ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் நடுவரிசைக்கு பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் மேத்யூ ஹம்ப்ரீஸ் முக்கிய விக்கெட் வீழ்த்தும் வீரராக உருவெடுத்துள்ளார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7