tamilnadu epaper

உடலும் உள்ளமும்

உடலும் உள்ளமும்

உள்ளூர உடனிருக்கும் உன் மனம் அறியுமா ?

உடனிருந்து நீ செய்யும் செயலெல்லாம் 

நன்மையா இல்லை தீமையா என்பதை

சொன்னாலும் சொல்வதை ஏற்றிடும் 

பக்குவம் உள்ளதா ? சந்தேகமே உறுதியாக

 

உள்ளமும் உடலும் பயணிக்கும் பாதைகள்

ஓர் வழியில் செல்கிறதா ? 

இல்லை எதிர் எதிரில் பயணமா?

உடல் சொல்லும் பாதையும் 

உளம் வேண்டும் பாதையும் ஒன்றானால் நன்றே 

 

உடலும் உண்ணும் உணவும் தேவைக்குதானா?

உடல் கேட்பதுதான் நாம் உண்பதுவோ

நாம் உண்பது உடல் கேட்டதைதானோ

நமக்கு தேவை வாய்க்கு ருசித்தான்

உடல் கேட்பதோ உரமாகும் உணவுதான் 

 

உன் உடலறியும் தன் உடலை

உன் உடலறியும் அதன் தேவையை

உன் உடல் மொழி நீ அறிந்தால்

அது சொல்வதை தெரிந்து கொண்டால்

தான தன்னை பேணிக்கொள்ளும்

 

 

ஓம் குமார் P N

2/38, கொட்டுக்கண்ணாரத்தெரு, 

தெற்கு வாசல், மதுரை