tamilnadu epaper

உழைப்பாளர்களுக்கு ஓர் மகுடம்!

உழைப்பாளர்களுக்கு ஓர் மகுடம்!

மகுடம் சூட்ட வேண்டும்
எம் மாண்புமிகு மனிதர்களுக்கு!

 பெற்ற தாயின் வயிற்றில்
 துள்ளித் திரியும் குழந்தை போல் 
 பார்த்து பார்த்து பாரெங்கும் பசிபோக்கும் எங்கப்பன் பாமர விவசாயிக்கு!

 உலகின் மொத்த அழகையும் 
 ஒற்றைச் சக்கரத்தை சுழற்றி 
 ஒளிமயமாய் காட்டும் 
 நம் வாழ்வின் தேரோட்டிகளுக்கு!

 காய்ச்சலையும் கருவையும்
 கனிவாய் கையாளும் மருத்துவச்சிகளுக்கு!

 வானில் சிதறிய விண்மீனாய்
 தெருவெங்கும்  சிதறிய குப்பைகளை
 சேகரிக்கும் தேவதைகளுக்கு!

 நிச்சயம் மகுடம் சூட்ட வேண்டும்!
 வாழ்வின் வலிகளை எதிர்த்து
 வாளேந்தும் 
 நம் வாழ்க்கையின் உண்மையான கதாநாயகர்களுக்கு!

From :
R. Radharamesh,
No76,
Vijayalakshmi nagar,
Kattupakkam,
Chennai -56