தாழம்பூ கொண்டையிலே
மல்லிகையும் மணக்குதடி
மனசத்தான் கெறக்குதடி
ஆளைத்தான் இழுக்குதடி
கடைக்கண் பார்வையாலே
கடந்து செல்கிறாயே
நெஞ்சமும் துடிக்குதடி
நெருங்கியே வந்தாலென்ன
ஆசையும் பெருகுதடி
அணைக்கத்தான் தோணுதடி
முல்லைப்பூச் சிரிப்பழகி
முன்னழகில் பேரழகி
ஒன்நெனப்புதான் கூடுதடி
நித்தமும் ஏங்குறேன்டி
காயாம்பூச் சேலைகட்டி
கரையோரம் போறவளே
பவுசாத்தான் போகாதே
என்னையும் பாரேன்டி
செத்த நில்லேன்டி
பேசலாம் வாயேன்டி
சொக்கித்தான் நிக்குறேனே
சுந்தரி ஒன்னழகுல
எனக்குள்ளே நுழைந்துதான்
சீண்டித்தான் பாக்குறியே
வம்பளத்து போறியே
வாலிபத்தை உசுப்புறியே
காதலும் உண்டானதே
காந்தவர்க் கண்ணழகியே
என்னைத்தான் ஏத்துக்கடி நெஞ்சுக்குள்ளே வச்சுக்கடி
காலமெல்லாம் புருசன் பொஞ்சாதியா வாழ்ந்திடலாம்
பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
விருதுநகர்