tamilnadu epaper

காலம் உனக்காக..!

காலம் உனக்காக..!

காலம் உனக்காக..!
பெண்ணே!
கலங்காதே
இந்த பூமியின்
இதிகாச காலங்களில்
பெண்ணுக்கு
ஏற்பட்ட கொடுமை
பாரதி காலத்தில்
பட்டுப்போனது.
கலியுகத்தில்
உனக்குள்
மாற்றங்கள்
ஏற்பட்டுவிட்டது.
ஆகாயம் முதல்
அரியாசனம் வரை
உனது ஆதிக்கம்.
இனி ஒரு விதிசெய்
உனக்கென பாதை
உருவாக்கு
பயணம் தொடங்கு
நாளை
உயரும் உன்
செல்வாக்கு!
கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.