ஏழையின் பசி
வயிறு, நிறைந்தது
கொட்டிய மழை
நீரில் ஏழையின்
கண்ணீரும்
கரைந்தது
மழை நீரில் .... "
வெடித்து பிளந்து
கிடந்த நிலம்
மழை நீர் பட்டதும்
இணைந்தது
வெடிப்பு நோய்
விலகி வீரியமானது
பசுமை நிலம்......"
கொட்டித் தீர்த்தது
வானம் புரிந்து
கொள்ள தவித்தது
வெள்ளத்தில் பூமி ..."
யாரின் அம்பு
பலமாய் பட்டதோ
மேகம் உடைந்து
சீரிப் பாய்ந்தது
மழை நீர் ...."
எத்தனை கடலை
தன்னுள் கொண்டதோ
கார் மேகம்
புரியாத புதிர் ....."
வீரனை சூரனை
வீட்டில் முடக்கி
தன் பலம்
காட்டி களமிறகும்
அடை மழை ..."
இடி மின்னல்
இசையுடன்
கானம் படி
கச்சேரி செய்து
மிதக்கவிடுகிறது
மழை ..."
வீட்டில் வசிப்போரை
வீதியில் இறக்கி
சமத்துவம் பார்க்கிறது
ஆவேச மழை.... "
குறுகிய கால
தாக்குதல் என்றாலும்
தடையங்களை
உருவாக்கி விட்டுச்
செல்கிறது புயல்
மழை .... "
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
-