tamilnadu epaper

திகில்

திகில்

ஆயிரம்கைவிரித்து
நீளநாக்குகளோடு
தலைவிரித்தாடும்
இந்த
ஒற்றை
ஆலமரம்
கடக்கையில்
மட்டும்
பயம்
கொல்லும்..

ஊர்கூடி
வேடிக்கை
பார்த்த
செவலத்தாயி
அம்மன்
ஆட்டத்தில்
இந்தப்பக்கம்
வரவேண்டாமென்றும்
முனி
அடித்து
மூர்ச்சையாகுமென்றும்
பயம்காட்டியாயிற்று..

இன்றைக்குபார்த்து
இரவுநேரமாகிவிட்டது
வேலைமுடிந்துவர..

இருட்டும்
நிசப்தமும்
எவருமில்லா
வெறுமையும்
திகிலூட்ட
வண்டுகள்
தவளைகள்
என
கிரீச்சிடும்
ஒலி
செவிதுளைக்க
நிமிர்ந்துபார்க்க
பயமாய்
ஆலமரம்
ஆர்ப்பரித்தது..

முருகாமுருகா
என
மூச்சுத்தெரிக்க
உளரியபடி
வியர்த்து
நகர
பின்னால்
ஜில்லிட்டது
தோளில்
ஏதோவொன்று...

குப்பென
வியர்வை
ஆறாய்
வழிய..

நடுக்கத்துடன்
திரும்பினேன்..

அதே
நடுக்கத்துடன்
"இரப்பா
நானும்வாரேன்"
என்றபடி
நின்றிருந்தான்
பக்கத்துவீட்டு
சிவராமன்...!

ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்