இளைஞனே எழுந்திரு
இந்தியா காத்திருக்கு
கள்ளங்கபடம் ஒழித்திடு
கலகங்களை நீக்கிடு
உள்ளமெங்கும் துணிவோடு
உற்சாகப் பெருக்கோடு
ஓதிவைத்த பிரிவினையை
ஒதுக்கிடவே ஓடிவா
நாளையுன் கைபிடிக்குள் நம்பிக்கையோடு தொடங்கிடு
புரட்சியிலே அன்புகலந்து
புதுமையைக் காட்டிடு
புவியிலோர் அற்புதத்தைப்
பூரிப்போடு சேர்த்திடு
உனக்கும் சக்திகள்
உண்டென்று நிரூபித்திடு
---------
முகில் தினகரன், கோவை