tamilnaduepaper
❯ Epaper

அஷ்ட பந்தனம்:

அஷ்ட பந்தனம்:
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?

 

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

 

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

 

`அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

 

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

 

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள். 

 

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

 

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

 

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

 

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

 

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

 

இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

 

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

 

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். 

 

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

ராசி பலன்

விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம்... மேலும் படிக்க

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள்... மேலும் படிக்க

நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான... மேலும் படிக்க

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான... மேலும் படிக்க

சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும்.... மேலும் படிக்க

நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். தன வரவுகளில் ஏற்ற,... மேலும் படிக்க

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய... மேலும் படிக்க