tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

நான் ரகு.

 

ஆன்லைன் மூலம் வரும் ஆர்டர்களுக்கான உணவுப் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு போய் வீடு வீடாக டெலிவரி கொடுக்கும் பணி எனக்கு.

 

டெலிவரி கொடுப்பதற்காக பைக்கில் அவசர அவசரமாய் சென்று கொண்டிருந்த போது குறுக்கே வந்து தடுத்து நிறுத்தினார் ஒரு நபர்.

 

  "தம்பி நீங்க அந்த வீட்டில் உள்ள பெரியவருக்குத்தானே டெலிவரி கொடுக்கப் போறீங்க?"

 

 "ஆமாம்... அது ஒண்னுதான் பாக்கி இருக்கு மத்ததெல்லாம் முடிச்சாச்சு"

 

  "ஒரு வேலை செய்யுப்பா... அந்த பொட்டலத்தை என்கிட்ட கொடுத்திட்டு அதுக்கு பதிலா இதைக் கொண்டு போய்க் குடுப்பா"அவர் வேறொரு பெட்டலத்தை தர முறைத்தேன்.

 

பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவர் நீட்ட மனம் மாறினேன். உடனே என்னிடம் இருந்த பொட்டலத்தைத் தந்து விட்டு அவர் பொட்டலத்தையும் பணத்தையும் வாங்கி என் பேக்கினில் வைத்துக் கொண்டு. "சார்... இதனால எனக்கு ஒண்ணும் பிரச்சனை வந்துடாதே?" பயத்துடன் கேட்டேன்.

 

அவர் பதிலேதும் சொல்லாமல் புன்னகையுடன் நகர, நானும் பெரியவருக்கு டெலிவரி கொடுத்து விட்டுத் திரும்பினேன்.

 

வழியெங்கும் மன உறுத்தல். "ஒருவேளை அந்த ஆள் தனியாய் இருக்கும் அந்த பெரியவரை சாகடித்து விட்டு உள்ளே புகுந்து கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருக்கானோ?.. கடவுளே கடைசியா டெலிவரி கொடுத்தது நான்தான்னு கண்டுபிடிச்சாங்கன்னா போலீஸ்காரங்க என்னை ரவுண்டு கட்டிடுவாங்களே"

 

நீண்ட யோசனைக்குப் பின், நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை இன்ஸ்பெக்டரில் கூற இருவரும் உடனே கிளம்பினோம்.

 

நாங்கள் அந்த வீட்டை அடைந்து அதிரடியாக நுழைந்த போது ஹால் சோபாவில் அந்த பெரியவரும் என்னிடம் பொட்டலம் கொடுத்த நபரும் உட்கார்ந்திருக்க ஆடிப் போனேன்.

 

  "சார்... சார் இவன்தான் ....இவன்தான் சார் உணவுப் பொட்டலத்தை மாற்றி கொடுத்தவன்" கத்தலாய்ச் சொன்னேன்.

 

எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு பெரியவரும் அந்த ஆளும் சிரிக்க கோபமான இன்ஸ்பெக்டர், "ஸ்டாப் இட்" என்று கத்தினார்.

 

சட்டென்று இருவரும் அமைதியாக, அந்த நபர் சொன்னார், "சார் நான் வேற யாரும் இல்லை இதோ இந்த பெரியவரோட மகன்தான்... நான் இல்லாத நேரத்தில் இவர் பொங்கலும் உளுந்து வடையும் ஆர்டர் பண்ணி சாப்பிடறார் சார்!...ஏற்கனவே அவருக்கு ஹை பிளட் பிரஷர்... கொலஸ்ட்ரால்... இருக்கு... அதுகளைச் சாப்பிட்டா அவரோட ஹெல்த் ரொம்ப பாதிக்கும் சார் .... அதை தடுக்கத்தான் நான் இவர் ஆர்டர் செய்த பதார்த்தங்களை வாங்கிட்டு நான் கொண்டு வந்த கேழ்வரகு களியைக் கொடுத்தனுப்பினேன்"

 

இன்ஸ்பெக்டர் திரும்பி என்னை முறைத்து விட்டு, "அப்படின்னா யாராவது பணம் கொடுத்தா நீ இதே மாதிரி பொட்டலத்தை மாற்றிக் கொடுப்ப அப்படித்தானே?... ஸ்டேஷனுக்கு வா இன்னிக்கு உனக்கு லாடம் கட்டறேன்" சொல்லிவிட்டு அவர் செல்ல, நான் நடுங்கியபடியே அவர் பின்னால் சென்றேன்.

 

( முற்றும்)

 

 முகில் தினகரன், கோயம்புத்தூர்.

ராசி பலன்

விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம்... மேலும் படிக்க

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள்... மேலும் படிக்க

நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான... மேலும் படிக்க

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான... மேலும் படிக்க

சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும்.... மேலும் படிக்க

நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். தன வரவுகளில் ஏற்ற,... மேலும் படிக்க

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய... மேலும் படிக்க