tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

1. அன்னபூரணி அம்பாளுடன் விநாயகர்

 

ஆத்மநாத சுவாமி கோவிலில் கருவறையை சுற்றிலும் இரண்டாம் பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயர்கள் வீற்றிருக்கிறார்கள்.

 

இவர்களில் ஒரு விநாயகர் அன்னபூரணி அம்பாளுடன் வடக்கு நோக்கியபிடி இருக்கிறார். 

 

இவரிடம் மனமுருகி வேண்டிக்கொண்டால் குடும்பத்தின் கஷ்டங்கள் பறந்தோடி எப்போதும் மகிழ்ச்சியானது நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. 

 

மற்றொரு இடத்தில் தெற்கு நோக்கியபடி இருக்கும் விநாயகர் நர்த்தன (ஆடல்) கோலத்தில் இருக்கிறார். இவருக்கு கீழே இரண்டுபேர் ஆடு வது போன்ற சிற்பமும் அமைந்துள்ளது.

 

மேலும் இந்த கோவிலில் முக்தியை அடைவதற்கான மூன்று முக்கிய நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ‘சத்’ அம்சமாக கோவில் மகா மண்டபமும், ‘சித்’ அம்சமாக அர்த்த மண்டபமும், ‘ஆனந்த மயமாக’ கருவறையும் இருப்பது சிறப்பு.

 

சிவன் கோவில்கள் பொதுவாக கிழக்கு நோக்கியபடிதான் இருக்கும். ஆனால் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் தெற்கு நோக்கியவாறு உள்ளது. 

 

சிவன் குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை தெட்சிணாமூர்த்தி என்பார்கள். 

 

இங்கு மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த ஸ்தலம் என்பதால் தெற்கு நோக்கி கோவில் அமைந்தது என்கிறார்கள்.

 

ஆவுடையார்கோவிலும், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோவிலும் தெற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது.

 

2. பிரளயம் காத்த விநாயகர்

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடமேற்குத் திசையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருப்புறம்பியம். இங்குள்ள ‘பிரளயம் காத்த விநாயகர்’ மிகச் சிறப்பு மிக்கவர். 

 

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் உலகத்தை புதுப்பிக்க பெருவெள்ளம் வந்து பெரும் அழிவை ஏற்படுத்தும். 

 

இதற்கு ‘பிரளயம்’ என்று பெயர். அவ்வாறே கிருதயுகத்தின் முடிவிலும் உலகை பெருவெள்ளம் சூழ்ந்தது. இத்தலத் தைக் காக்கும் பொருட்டு சிவபெருமான், விநாயகரிடம் பிரளயத்தை தடுத்து நிறுத்து மாறு கூறினார். அ

 

வரின் கட்டளையை ஏற்று விநாயகப்பெருமானும் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளப்பெருக்கை ஓம்காரம் கொண்டு தடுத்து ஒரு கிணற்றுக்குள் அடக்கினார்.

 

அத்தருணத்தில் வருணபகவான் கடலில் இருக்கும் நத்தை, சங்கு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றைக் கொண்டு விநாயகரின் திருவுருவத்தை செய்து இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார். 

 

அவரே ‘பிரளயம் காத்த விநாயகர்’ ஆவார். விநாயகர், இயற்கையை மீறிப் புறம்பாக காத்ததால் இத்தலத்திற்கு ‘திருப்புறம்பியம்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

 

இந்த விநாயகருக்கு தினசரி அபிஷேகம் கிடையாது. ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் தேனாபிஷேகம் இரவும் பகலும் தொடர்ந்து நடைபெறும். 

 

அச்சமயம் அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதையும் விநாயகரின் திருவுருவம் உறிஞ்சிக் கொள்வது கண்கொள்ளாக் காட்சியாகும். எப்போதும் வெளிர் சந்தன நிறத்தில் இருக்கும் விநாயகரின் திருமேனி தேன் அபிஷேகம் முடிந்தபின், செம்பவள நிறத்தில் ஜொலிப்பது அழகோ அழகு.

 

-Kavitha Saravanan 

Srirangam.

ராசி பலன்

வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். கால்நடை செயல்களில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிந்தனைப்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையை தரும். சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செல்வச் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இணையம் துறைகளில்... மேலும் படிக்க

தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் விவேகம் வேண்டும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பயணம்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கு இடையே இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த உதவிகள் சாதகமாகும். புதியவர்களின் நட்பின் மூலம் உற்சாகம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மனதளவில் தெளிவும்,... மேலும் படிக்க

வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை... மேலும் படிக்க

காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். போட்டி தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகள்... மேலும் படிக்க

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதுமையான சூழல் ஏற்படும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படலாம். சக... மேலும் படிக்க

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிகம் தொடர்பான புரிதல்கள் மேம்படும். நுண் கலை... மேலும் படிக்க

தாய் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம்... மேலும் படிக்க

கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய சரக்குகள் விற்பனை ஆகும். திட்டமிட்ட காரியம் கைகூடி வரும்.... மேலும் படிக்க

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். சுபகாரிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி... மேலும் படிக்க