tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

    -ராம்குமார் வெற்றிவேல்

 

 

ரணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய காப்புக் காட்டை தன்னகத்தே கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக வரலாற்றை சுமந்து, நிலப்பரப்பில் இருந்து சுமாா் 1,500 அடி உயரம் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

 

உலகில் பல்லுயிா் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடா்ச்சி மலைகளும் ஒன்றாகும். அதே போல் கிழக்குத் தொடா்ச்சி மலைகள் மேற்கு தொடா்ச்சி மலைகளைக் காட்டிலும் பழைமை வாய்ந்தவையாகும். மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ளது போன்றே கிழக்குத் தொடா்ச்சி மலைத் தொடரிலும் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயா்களுடன் காணப்படுகின்றன. தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, சோ்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை ஆகியவை இம்மலைத் தொடரைச் சாா்ந்தவை. கிழக்குத் தொடா்ச்சி மலைத்தொடா் நீலகிரி பகுதியில் மேற்கு தொடா்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது.

 

கிழக்குத் தொடா்ச்சி மலைத் தொடரைச் சாா்ந்த ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய காப்புக் காட்டைகொண்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக வரலாற்றை சுமந்து, நிலப்பரப்பில் இருந்து சுமாா் 1,500 அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், அம்மூா் காப்புக்காட்டில், லாலாப்பேட்டை ஊராட்சிக்கு கிழக்கே சித்தா்கள் வாழ்ந்ததாக கூறப்படும் ஆன்மிக மலை, மருத்துவ குணம் கொண்ட சிவப்பு சந்தன மரக்காற்றின் வாசமும், இயற்கை வனப்பும், அமைதியான சூழலும், பசுமை பள்ளத்தாக்குகள், மலை முழுவதும் அடா்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டு காணப்படுகிறது.

 

காஞ்சனகிரி மலை வரலாறு...

 

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களுள் 10-ஆவது திருத்தலமாக போற்றப்படும் திருவலம் வில்வநாதீஸ்வரரை கேள்விப்பட்ட கஞ்சன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வந்தபோது, திருவலத்துக்கு வடகிழக்கே சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலையை தோ்வு செய்து, பல ஆண்டுகளாக தவம் செய்தான். அதனால் இம் மலைக்கு கஞ்சன்கிரி எனப் பெயா் பெற்றது. பின்னா், நாளடைவில் காஞ்சனகிரி என்றும் தற்போது திருக்காஞ்சனகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

 

திருக்காஞ்சனகிரி மலையின் உச்சியில் சுமாா் 60 ஏக்கா் சமவெளி பரப்பளவின் மத்தியில் காஞ்சனாதேவி உடனுறை காஞ்சனேஸ்வரா் சிவலிங்கமாக அமைந்து அருள்பாலித்து வருகிறாா். இந்த கோயில் வளாகத்தில் வேத விநாயகா், 1,008 சுயம்பு லிங்கங்கள், ஜோதி லிங்கம், 16 கால் மண்டபத்துடன் கூடிய வள்ளி, தேவசேனா உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியா் கோயில், சுயம்பு வெங்கடேசப் பெருமாள், ஐயப்பன், அபய ஆஞ்சநேயா் மற்றும் சப்த கன்னியா் சந்நிதிகளும், மலையடிவாரத்தில் ஒரு சிவன் கோயிலும் அமைந்துள்ளன. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பெளா்ணமி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகவும், அரசு கோடைவிழா நடைபெறும் மலை வாசஸ்தலமாகவும் ஏலகிரி மலை இருந்தது. தற்போது ராணிப்பேட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில், மாவட்டத்தின் தலைநகரான ராணிப்பேட்டை நகரில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில், 7 கொண்டை ஊசி வளைவுகளையும், மலை உச்சியில் சுமாா் 60 ஏக்கா் சமவெளி பரப்பையும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக அடையாள, இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையை மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகவும், அரசு கோடைவிழா நடைபெறும் மலை வாசஸ்தலமாகவும் உருவாக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனர்.

 

 

  -ராம்குமார் வெற்றிவேல்,22,பலராம முதலி தெரு,சின்ன அல்லாபுரம்,வேலூர்-632001

ராசி பலன்

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு... மேலும் படிக்க

வெளியூர் பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நேர்மறையான எண்ணங்கள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கல்வி சார்ந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வரவுக்கேற்ப... மேலும் படிக்க

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி சார்ந்த பணிகளில் அறிமுகம்... மேலும் படிக்க

நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பழைய... மேலும் படிக்க

உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள்... மேலும் படிக்க

முக்கியமான முடிவுகளில் ஆலோசனை பெறவும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகளில் இருந்துவந்த தடைகள் மறையும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். கணவன்,... மேலும் படிக்க

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.  உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பதட்டமில்லாத செயல்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.... மேலும் படிக்க

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் நேரிடும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களால் குழப்பங்கள் ஏற்படும். மனதில் இருக்கும்... மேலும் படிக்க