tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

        மார்கழி மாதம் தான் தேவர்களுக்கு விடியற்காலை பொழுது என்பதால் அவர்கள் மகாதேவரை தரிக்க அந்த மாதத்தில் வருவது வழக்கம். மக்களை பொறுத்தவரை மார்கழி மாதம் என்பது இறைவழிபாட்டிற்கு மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமானது சிவபெருமானை வழிப்பட மிக சிறந்த நாளாகும்.

 

                  மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.

 

      “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை”என்று கூறிய தாருகாவனத்து முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

 

        ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்... ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக.

 

               சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.

 

            திருவாதிரைக்கு ஒரு வாய் களி (கேழ்வரகு களி)

 

சிதம்பரத்திற்கருகே ஒரு ஊரில் சேந்தனார் என்ற ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானிடம் அளவு கடந்த அன்பு கொண்டவர். அவர் தினமும் விறகுகள் வெட்டி விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில், உணவை தயாரித்து அன்றைய தினம் ஒரு சிவனடியார்க்கு உணவிட்டு, அவர் பசியாற்றி, பின் தான் உணவருந்தி, சிவ சிந்தனையுடன் தனது தொண்டினை சிறப்பாக ஆற்றி வந்தார்.

 

ஒரு நாள் பலத்த மழை காரணமாக அவர் சேர்த்து வைத்திருந்த விறகுகள் காயாமல் போகவே, அன்றைய தினம் வரும் வருமானமும் தடைபட, நல்ல அரிசியுடன் கூடிய உணவுக்கு வழியின்றி, கிடைத்த கேழ்வரகு தானியத்தில் செய்த களியை வைத்துக்கொண்டு யாராவது சிவனடியார்கள் வந்தால் அவர்களுக்கு தானமிட்டு தொண்டு செய்து அவர்கள் பசியை போக்கிவிடலாமென்று ஆவலுடன் காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல எவரையும் காணாது சிவபெருமானை துதித்தபடி இருந்தார். பக்தர்களை சோதிப்பதும், பின் அவர்களின் பெருமையை உலகத்துக்கு பறைச்சாற்றுவதும் சிவபெருமானின் லீலைகளில் ஒன்றல்லவா?

 

இவரின் பெருமையை உலகத்திற்கு அனறைய தினம் காட்டிட உள்ளத்தில் முடிவெடுத்தார் சிவபெருமான். தானே ஒரு அடியார் வேடத்தில், அவரின் இல்லத்திற்கு வந்து அவர் பக்தியுடன் படைத்த கேழ்வரகு களியை “இதுவல்லவோ அமிர்தம்”! என்று பாராட்டியபடி, உண்டு பசியாறி, இரவு பசிக்கும் வேண்டுமென, அவரிடம் வேண்டியதை பெற்றுச் சென்றார்.

 

மறு நாள் சிதம்பரம் கோவில் பூஜைக்காக கோவிலை திறந்து இறைவனுக்கு அபிஷேக ஆராதைனைகள் நடத்திட வந்து கருவறை கதவை திறந்த சிவாச்சாரியார்கள், இறைவன் குடிகொண்டிருக்கும், கருவறை முழுதும் ஆங்காங்கே சிதறியிருந்த உணவாகிய கேழ்வரகு களியமுதுகளை கண்டும், இறைவனின் வாயிலும், கரத்திலும் இருந்த கேழ்வரகு களியமுதை கண்டும் திகைத்துப் போய் அந்நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்.

 

பின் அன்றைய தினம் சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் ரதோத்ஸ்வத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அரசன் முன்னின்று இறைவனை பக்தியுடன் தேரில் எழுந்தருளச்செய்த பின், பக்தியுடன் தேரின் வடம் பிடித்து அரசனும் மற்றும் அனைவரும் ரதத்தை இழுக்க முயல தேர் மழையினால் சேறான இடத்தில் அழுந்திக் கொண்டு நகர மறுத்தது. அவ்வேளையில் அரசனால் தேடப் பட்ட சேந்தனாரும், நடராஜரின்த் தேர் திருவிழாவை கண்டு களிக்க அங்குதான் வந்திருந்தார். அப்போது ஒரு அதியசம் நடந்தது. “சேந்தனாரே.! என் மீது பல்லாண்டு பாடினால் தேரின் சக்கரம் விடுபட்டு நகரும். நீ பாடுவாயாக.!” என்று வானிலிருந்து ஓர் அசரீரி குரல் எழுந்தது. அனைவரும் திகைத்தனர்.

 

யார் அவர்? எங்கே அந்த சேந்தனார்? என்று அனைவரும் திகைக்க, “இறைவா! எனக்கு பாடவெல்லாம் தெரியாதே! இந்த ஏழைக்கு உன் மீது வைத்திருக்கும் அன்பைத் தவிர எனக்கு என்ன தெரியும்.? என இறைவனின் திருமுகத்தை நோக்கி சேந்தனார் மெய்யுருகி கதற, “உன்னால் இன்று முடியும்! பாடு” என்ற அசரீரியின் குரலுக்கு அடுத்த நொடி மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது.

 

சேந்தனார் இறைவனின் அருளால் இறைவனை வாழ்த்தி 

 

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல 

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து 

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே"

 

என்ற பாடலை முதல் பாடலாகக் கொண்டு பதின்மூன்று பாடல்களாக பல்லாண்டு பாடினார்.

 

உடனே பள்ளத்திலிருந்து விடுபட்டு தேர் நகர்ந்தது. அனைவரும் சேந்தனாரின் காலில் விழுந்து வழிபட்டனர். அரசன் சேந்தனாரின் பெருமைகளை தன் கனவில் கண்ட நிகழ்ச்சியினை,அனைவருக்கும் உரைக்க, “இறைவனே வந்து என் கையால் உணவு புசித்தானா?” என்ற மகிழ்வில் பக்தியின் உச்சத்தில் சேந்தனார் மனம் கனிந்து உருகினார்.

 

இவ்வாறு தன் பக்தனுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததும் ஒரு திருவாதிரை நாளே! இன்றும் சிவன் கோவில்களில், களி செய்து இறைவனுக்கு படைத்து பிரசாதமாக வழங்குகின்றனர். “திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி! உண்ணாதவருக்கு நரகக் குழி ” என்ற பேச்சு வழக்கும் உண்டு. 

 

திருவாதிரைக் களி‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது

 

🌺திருவாதிரை விரத பலன்கள்🌺

 

               மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து திருநீறு பூசிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம். அன்றைய தினம் சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு சாப்பிட தரவேண்டும். விரதம் இருப்பவர்கள் அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.

 

Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai

ராசி பலன்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.... மேலும் படிக்க

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின்... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.... மேலும் படிக்க

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப்... மேலும் படிக்க

குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த... மேலும் படிக்க

பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின்... மேலும் படிக்க


மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கிய... மேலும் படிக்க

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின்... மேலும் படிக்க