tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

^ராணுவ பேட்டையாக திகழ்ந்த ராணிப்பேட்டை நகரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பெரிய ராணுவத்தளமாகவும் இருந்துள்ளது. அதற்கு அத்தாட்சியாக, இன்றும் ராணிப்பேட்டையில் பல கட்டிடங்கள், கல்லறைகள் உள்ளன.

 

^ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் இடம் பெற்றிருந்த பெரிய குதிரைப்படை, ராணிப்பேட்டையில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடத்தில் தான் இப்போது ராணிப்பேட்டை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

 

^தற்போதைய டிஎஸ்பி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், அரசினர் மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் பல பாழடைந்த கட்டிடங்கள் போன்ற அனைத்தும் குதிரைப் படையினர் தங்கள் குதிரையுடன் தங்கிய இடங்கள் ஆகும்.

 

^அரசினர் சிறுவர் காப்பகம் முன்பாக, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள ஒரு பழைய கட்டிடம் வெடிமருந்து கிடங்காக இயங்கி வந்துள்ளது.

 

^இப்போதுள்ள சிறுவர் இல்லத்திலும் ஆங்கிலேய ராணுவத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

 

^மாவட்டத்தின் பெரிய வார சந்தையான ராணிப்பேட்டை வார சந்தை ஒரு காலத்தில் இரும்பு வேலி அமைக்கப்பட்டு அதில் போர்க் கைதிகள் தங்கவைக்கப்பட்டும் திறந்த வெளிச்சிறையாக செயல்பட்டு உள்ளது என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

 

^ராணிப்பேட்டையின் மையப்பகுதியான நவல்பூர் பகுதியில் ஒரு கல்லறை உள்ளது. இந்தக் கல்லறையில் உள்ள அனைத்து பழமை வாய்ந்த சமாதிகள், ஆங்கிலேயர் அரசின் கப்பல் படை வீரர்களின், போரின்போது இறந்த வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் ஆகும். மேலும் அவர்களின் குடும்பத்தினரின் சமாதிகளும் இங்கு உள்ளன. இந்த இடத்திற்கு நோவல் கிரேவ் யார்ட் என்று பெயர் இருந்துள்ளது.

 

^முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்த ராணுவத்தினருக்கு உதவியாக மிக பெரிய ராணுவம் இங்கு நிலை நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. மேலும் ராணுவத்தினர் சென்னையில் இருந்து பெங்களூரிற்கும், பெங்களூரில் இருந்து சென்னைக்கும் செல்லும் போது இங்குதான் கூடாரம் அமைத்து தங்கும் இடமாக பயன்படுத்தி உள்ளனர்.

 

^பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ராணிப்பேட்டை நகரம், நட்பு, வீரம், காதல் என வரலாற்று சம்பவத்தின் அடிப்படையில் உருவானதாக வரலாறு கூறுகிறது.

 

*டெல்லி கேட்*

 

பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது . 18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் முகலாய கவர்னர் தாவுத் கான் பண்ணி கட்டிய கோட்டையின் ஒரு பகுதியாக இந்த வாயில் இருந்தது . ஆற்காடு முற்றுகையின் போது ராபர்ட் கிளைவ் ஏற்பாடு செய்த தற்காப்பு தளமாக இது இருந்தது

 

*மகேந்திரவாடி*

 

மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இது குணபரன் என்று அழைக்கப்படும் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். காண்போரை கவரும் வண்ணம் இரு முழுதூண்களுடன் இரு அரைத்தூண்களுடனும் மிகவும் எளிய முறையில் இக்குடவரை குடையப்பட்டுள்ளது.

 

*ரத்தினகிரி முருகன் கோவில்*

 

 இந்த கோவில் ராணிப்பேட்டையில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள ரத்தினகிரி என்னும் ரத்தினகிரி என்னும் மலை மலையில் அமைந்துள்ளது. இந்த கோவில் 14ம் நூற்ராண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்டது.

 

*காஞ்சனகிரி மலை*

 

ராணிப்பேட்டை மக்களின் மனம் கவர் இடமான காஞ்சனகிரி மலை கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட சிறிய மலையாகும். பசுமையான இந்த மலை ஒரு சிறிய சிவன் மற்றும் முருகன் ஆலயங்களை கொண்டுள்ளது. மணி சத்தம் எழுப்பும் பாறை இம்மலையின் முக்கிய கவரும் அம்சமாகும்.   

 

*தொழில்கள்*

 

இராணிப்பேட்டை தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். முழுக்க,முழுக்க தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக இருக்கிறது. தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன.

மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்து பெற்ற பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. நூற்றாண்டு பெருமை வாய்ந்த பாரிபீங்கான் தொழிற்சாலை, சாமே டிராக்டர் தொழிற்சாலை, சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை, தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

 

ஜி.ஆர். ப்ரஜன் 

சென்னை

ராசி பலன்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.... மேலும் படிக்க

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின்... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.... மேலும் படிக்க

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப்... மேலும் படிக்க

குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த... மேலும் படிக்க

பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின்... மேலும் படிக்க


மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கிய... மேலும் படிக்க

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின்... மேலும் படிக்க