tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

* ஹெல்மெட் இன்றி பலி 30ஆயிரம்

புதுடெல்லி, ஜன.9–

நாட்டில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 1.80 லட்சம் பேர் பலியானார்கள். இதில் ஹெல்மெட் இன்றி வாகனம்இயக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரம் என்று மத்தியஅமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பல மாநிலங்களின் போக்குவரத்து துறை அமைச்சர்களுடன், ஆலோசனை நடத்தினர். பின்னர், அவர் அளித்த பேட்டி:

நாட்டில் 2024ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அவர்களில் 30 ஆயிரம் பேர், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள். சாலை விபத்து மரணங்களில் 66 சதவீதம் பேர், 18 முதல் 34 வயது வரையிலானவர்கள். பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் நடந்த போக்குவரத்து விதிமீறல்களில் 10 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். டிரைவிங் லைசன்ஸ் பெறாதவர்கள் ஓட்டிய வாகனங்களால் நடந்த விபத்துகளில் ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

சாலை போக்குவரத்தை பாதுகாப்பை அதிகரித்து, இந்த வேதனை நிலவரத்தை மாற்ற வேண்டும். இதுகுறித்துதான்,ஆலோசனை நடத்தினோம்.

நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்த, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும். இதில் ஒரு புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.

இலவச சிகிச்சை

சாலை விபத்துகளில் உடனடியாக இலவச சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை, பரிசோதனை முறையில், சில மாநிலங்களில் அமலாக்கினோம். அதில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. எனவே, அவற்றை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாலை விபத்து குறித்து போலீசுக்கு தகவல் அளித்த 24 மணிநேரத்துக்குள், இலவச சிகிச்சை திட்ட பயன்களைப் பெற முடியும். பாதிக்கப்பட்டவர், 7 நாட்களுக்கு இலவச சிகிச்சை பெறலாம். இதற்கான உச்சவரம்பு, ரூ.1.50 லட்சம். சாலை விபத்தில் மரணத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பி செல்லும் சூழலில், இறந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ,2 லட்சம் வழங்கப்படும். 

இவ்வாறு அமைச்சர் கட்கரி தெரிவித்தார்.

ராசி பலன்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள்... மேலும் படிக்க

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம்... மேலும் படிக்க

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள்... மேலும் படிக்க