tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

நாகர்கோவில், ஜன.9–

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கால் நரம்பு வீக்கத்துக்கு நவீன லேசர் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த வசதியை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ராமலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:– ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பொது அறுவை சிகிச்சை பிரிவு மிக முக்கியமான முதுகலை பட்ட மேற்படிப்பு துறையாகும். இங்கு தினமும் ௨௫௦ வெளி நோயாளிகள் ௧௫௦ உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 

நவீன சிகிச்சை முறை

தற்போது இந்த பொது அறுவை சிகிச்சை பிரிவில் தனியார் ஆஸ்பத்திரிகளை போல் நவீன சிகிச்சை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்ட நிதியில் இருந்து நவீன லேசர் அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தி மூலம், பவுத்திரம், மூல வெடிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதனால் அதிக வலி இல்லாமல், குறைந்த நாட்களில் அறுவை சிகிச்சை பெற முடியும்.

வெரிகோஸ் வெயின்

கால் நரம்பு வீக்கம் (வெரிகோஸ் வெயின்) நோயாளிகளுக்கும் இங்கு லேசர் அறுவை சிகிச்சை, கதிரியக்க அதிர்வு வெப்ப சிகிச்சை போன்ற உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோய்க்கு ஆபரேசன் செய்யாமல் கத்தி பயன்படுத்தாமல் ஒரு மி.மீ. அளவில் துளையிட்டு நரம்பில் ஊசி மூலம் மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும்.

இதற்காக ரூ.௩௦ லட்சம் மதிப்பிலான நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இனிமேல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சாதாரண மக்களும் இந்த உயரிய சிகிச்சையை இலவசமாக பெற முடியும். எனவே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நவீன வசதிகளை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு டீன் டாக்டர் ராமலட்சுமி கூறினார். 

+++

ராசி பலன்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள்... மேலும் படிக்க

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம்... மேலும் படிக்க

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள்... மேலும் படிக்க