tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

எங்கள் குலதெய்வம் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும்.108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே வருடத்தின் அனைத்து நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.இத்தலத்தில் உள்ள பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவி மீது வைத்துக் கொண்டும், அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கிக் கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. 

 

திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனாகிய பலிச்சக்கரவர்த்தி தேவர்களை எதிர்த்துப் போரிட்டான். அந்த பாவம் நீங்க அசுரகுல கால நல்லூர் எனும் பகுதியில் தவமிருந்து பெருமாளை வழிபட்டான். மகாவிஷ்ணு ஆதிவராகர் ரூபத்தில் பலிச் சக்கரவர்த்திக்கு காட்சிகொடுத்து, அவனது பாவங்களைப் போக்கி அருளினார். பின்னர் பலியின் விருப்பத்திற்கு ஏற்ப, அங்கேயே திருக்கோவில் கொண்டார். அது முதல் அத்தலம் ‘வராகபுரி’ என்றானது.

 

 

காலவமுனிவர் என்பவர் தமது இல்லறத்தின் பயனாய், தனக்கு பிறந்த 360 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டி வராகபுரிக்கு வந்தார். 360 பெண் குழந்தைகளும் அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியதுடன், வராகமூர்த்தியிடம் மிகுந்த பேரன்பும் கொண்டு திகழ்ந்தனர். தனது பெண்களுக்கு உரிய வயது வந்ததும், தன் பெண்களை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ளுமாறு வராகமூர்த்தியிடம் வேண்டினார் காலவ முனிவர். அதற்காக கடுமையான தவமும் இருந்தார். ஒருநாள் வராகப்பெருமாள், பிரம்மச்சாரியாக வந்து காலவ முனிவரின் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் மணம் புரிந்து கொண்டார். கடைசி நாளன்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து ‘அகிலவல்லி' எனும் ஒரே பெண்ணாக்கினார். பின்னர் அந்தப் பெண்ணை தனது இடதுபக்கத்தில் வைத்துக்கொண்டு கருவறைக்குள் சென்று ஆதிவராக மூர்த்தியாய், அதுவும் லட்சுமி வராகராய் சேவை சாதித்தருளினார்.

 

 

 

 

கோயிலின் மூலவராக ஆதிவராகப் பெருமாளும ், மூலவர் தாயாராக அகிலவல்லி நாச்சியாரும ், உற்சவராக நித்ய கல்யாண பெருமாள ், ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றனர். கல்யாண விமானமும ், தலவிருட்சமாக புன்னை மரத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.

மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது.

 

 

உற்சவர் நித்யகல்யாண பெருமாள ், கோமளவல்லி தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டி பொட்டு அமைந்துள்ளது. மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்குகின்றன. 

 

தம்பதி சமேதராக (ஆறரை அடி உயரத்துடன்) ஆதிவராகப் பெருமாள் சேவை சாதிக்கும் திருத்தலம் இது ஒன்றே.

 

 

தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருமணம் விரைவில் நடைபெறவேண்டி பலரும் இக்கோயிலுக்கு வருவது இக்கோயிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும்.ஒரு தலத்தில் வழிபட்டால் வீட்டினையும் கட்டிவிடலாம்; கல்யாணத்தையும் நடத்திவிடலாம். ஆம்! அந்தப் பெருமையைத் தாங்கி நிற்பது திருவிடந்தை திருத்தலம் ஆகும். 

 

திருமங்கை ஆழ்வார் பெருமாளை 10 பாசுரங்களில் பாடி சிறப்பித்துள்ளார். 

 

அழகிய மணவாளதாசர் நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் 92-வது பாசுரத்தில் "தொண்டானேன் திருவிட வெந்தைக்கே செறிந்து" என பாடியுள்ளார். 

 

குரவை ராமனுஜதாசர் தனது நூற்றெட்டு திருப்பதி திருப்புகழில் 92-வது பாசுரத்தில் "இடவெந்தை பதிவாழ்மேவிய பெருமாளே" என பாடியுள்ளார்.

 

 

இங்கு ‘திரு’வாகிய லட்சுமியை, எம் தந்தையாகிய பெருமாள் தனது இடது பாகத்தில் தாங்கிக்கொண்டிருப்பதால் இத்தலம் ‘திருஇடவெந்தை’ என்றானது. அது மருவி தற்போது ‘திருவிடந்தை’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வராகமூர்த்தி தினமும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இத்தல உற்சவரின் திருநாமம் ‘நித்திய கல்யாணப்பெருமாள்’ என்றானது. இங்கு உற்சவரின் தாடையில் தாமாகவே தோன்றிய திருஷ்டிப்பொட்டு உள்ளதாம். இதனால் இத்தலத்தில் வழிபட கண் திருஷ்டி அகலும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இங்கு மூலவர் ஆதிவராகரின் காலடியில் ஆதிசேஷனும், அவரது மனைவியும் இருப்பதால், இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், பிற கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கும் திருத்தலமாகவும் உள்ளது. 

 

இது தவிர காரியத் தடை,திருமணத் தடைகளையும் உடனே உடைத்தெறியும் திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு பலி சக்கரவர்த்திக்கு வராகர், ஆதிவராகராக சேவை சாதித்தருளினார். எனவே இங்கு வழிபட்டால் வீடு, நிலம் வாங்கவும், வீடு கட்டவும் யோகம் உண்டாகும் என்கிறார்கள். ஆம்! வராகமூர்த்தியின் அவதார நோக்கம், இரண்யாட்சனிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்ட பூமியை மீட்டு வந்ததுதான். இங்கு வெளிப் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கநாதர், ரெங்கநாயகி சன்னிதிகளும் உள்ளன. சுக்ர தோஷம் அகல இத்தல ரெங்கநாதர் வழிபாடு துணைபுரியும் என்கிறார்கள். 

 

திருமணமாகாத ஆண், பெண் யாரானாலும் திருவிடந்தைக்கு சென்று, அங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி, இரண்டு மாலைகளை வாங்கிச்சென்று பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அவற்றுள் ஒரு மாலையைப் பெற்று ஒன்பது முறை ஆலயவலம் வந்து, கொடிமரத்தில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு அம்மாலையுடன் வந்து தினமும் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் கூடிவரும். திருமணம் ஆன பிறகு தம்பதியர்கள் தங்கள் துணைகளுடன் மீண்டும் இங்கு வந்து பெருமாளுக்கு மாலை சமர்ப்பித்து, ஆலயத்தினை மூன்று முறை வலம்வந்து வணங்கிச் செல்லவேண்டும். வீட்டினில் வைத்து வழிபட்டு வந்த பழைய மாலையினை தங்கள் துணைகளுடன் இங்கு வரும்போது எடுத்துவந்து ஆலய தலமரமான புன்னை மரத்தினடியில் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும். சென்னை திருவான்மியூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குக்கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம்- புதுச்சேரி செல்லும் வழியில் கோவளத்திற்கு அடுத்து திருவிடந்தை அமைந்துள்ளது. 

 

 

கோவில் காலை 6:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும்,

-கு.ராஜகுரு

ராமலிங்காபுரம்

ராசி பலன்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.... மேலும் படிக்க

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின்... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.... மேலும் படிக்க

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப்... மேலும் படிக்க

குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த... மேலும் படிக்க

பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின்... மேலும் படிக்க


மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கிய... மேலும் படிக்க

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின்... மேலும் படிக்க