tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்கழி 26-ம் நாள் (ஜனவரி 10- ந்தேதி) வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்துக்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடியற்காலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

 

திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

 

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

 

புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும், இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

 

மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.

 

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது

 

--- சிவ.முத்துலட்சுமணன்

போச்சம்பள்ளி

ராசி பலன்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.... மேலும் படிக்க

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின்... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.... மேலும் படிக்க

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப்... மேலும் படிக்க

குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த... மேலும் படிக்க

பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின்... மேலும் படிக்க


மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கிய... மேலும் படிக்க

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின்... மேலும் படிக்க