tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகாவிஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை) ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.

கோயில் சிறப்பம்சம்
இறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது. திருவாங்கூர் நிலப்பகுதியின் இறைவனாக இன்றும் ஸ்ரீ பத்மநாபர் போற்றப்படுகிறார்.
108 திவ்ய தேசங்களில், அதாவது மகாவிஷ்ணுவுன் மிகவும் புனிதமான கோவில்களில், விஷ்ணுவின் விக்ரகம் மூன்று நிலைகளில் பொதுவாக ஒரு நிலையில் இருப்பதைக் காணலாம். அதாவது நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ அல்லது சயனித்துக் கொண்டோ இருப்பதாகக் காணலாம். ஆனால் குறிப்பாக பத்மநாபசுவாமி கோவிலில் மட்டும் ஈசன் மூன்று நிலைகளிலும் இருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். கர்பக் கிரகத்தில் இருக்கும் மூலவரை மூன்று வாதில்களில் இருந்து பார்க்கும் பொழுது அவர் சயனித்துக் கொண்டும், நடு வாயில் வழியாகப் பார்க்கும் பொழுது ஈசன் நின்று கொண்டும், மேலும் உற்சவங்களின் பொழுது திரு வீதி உலாவில் பல்லக்கில் கொண்டு செல்லும் உற்சவ மூர்த்தி அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்.
அண்மையில் வெளியான ஒரு உண்மை என்ன என்றால், இறைவன் பத்மனாபரின் விக்ரகம் முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும். இறைவனின் கிரீடம் மற்றும் குண்டலங்கள், மற்றும் கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய சாலிக்கிராம மாலை மற்றும் அவர் அணிந்திருக்கும் அழக்கான பூணூல் கயிறும் தங்கத்தால் ஆனதே. ஈசனின் மார்பில் காணப்படும் அலங்கார மாலைகள், வலது கரத்தில் பரம சிவரை பாதுகாக்கும் வண்ணம் அமைந்த கங்கணம், இடது கையில் அவர் வைத்திருக்கும் தாமரை மலர் ஆகிய யாவும் தங்கத்தால் ஆனதே. இறைவனின் நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் மிகவும் சுத்தமான தங்கத்தால் இழைத்ததாகும். இறைவனின் திருவடிகளும், தங்கத்தால் ஆனதே.
கோவில் கோபுரம்
இந்தக் கோவில் 100 அடி உயரத்துடன் ஏழு-வரிசைகள் கொண்ட கோபுரம் கொண்டதாகும். இந்தக் கோவில் பத்ம தீர்த்தத்தின் (அதாவது தாமரைகள் அடங்கிய குளம்) அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும், இங்கே காணப்பெறும் ௩௬௫ மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப் பெற்றதாகும், இவற்றை காணக் கண் கோடி வேண்டும் என்பதே நிஜமாகும். கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோவில் வாசலில் தொடங்கி கோவிலின் கர்பக்கிரஹம் வரைக்கும் இந்த தாழ்வாரம் நீண்டதாக காணப்படுகிறது. தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது. கோபுரத்தின் கீழ்த்தளம் (கிழக்கு வசமுள்ள முதன்மை வாசல்) நாடக சாலை என அறியப்படுகிறது, இங்கே வருடந்தோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கர்பக்கிரகம்
கோவிலின் கற்பக்கிரகத்தில், அய்யன் மகா விஷ்ணு அனந்தன் அல்லது ஆதி செஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் பள்ளி கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் விளங்கும் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. ஈசரின் வலது கரம் பரமசிவரின் மீது தொங்குவது போல காணப்படுகிறது. மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம். இந்த சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 10008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும். நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தெரிவு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சாலிக்கிராமத்தின் மீது, "காட்டு சர்க்கரை யோகம்" என வழங்கும் ஒரு சிறப்பான ஆயுர்வேத மூலிகைகளின் கலவை பூசி, கொண்டு வரப்பட்டது. இந்தக் காட்டு சர்க்கரை விக்ரகத்தை பூச்சிகள் மற்றும் இதர உயிரினங்கள் ஆண்ட விடாமல் தடுக்கும். இறைவனுக்கு செய்துவரும் அபிசேகமானது பரம்பரை வழி வந்த வழிபாடு அல்ல. தினமும் மலர்களால் இறைவன் அர்ச்சிக்கப் படுகிறார் ஆனால் அபிஷேகத்திற்கு சிறப்பான வேறுபட்ட விக்ரகங்கள் பயன் படுத்தப் படுகின்றன. மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன, விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள்.
கோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை "ஒற்றைக்கல் மண்டபம்" என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் "ஒற்றைக்கல் மண்டபத்தின்" மீது ஏறவேண்டும். இறைவனை மூன்று வாதில்களில் இருந்து சேவிக்கலாம், - முதல் வாதில் வழியாக இறைவனின் அழகிய திருமுகம் மற்றும் அவர் கையின் அடியில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தையும் நாம் காணலாம், இரண்டாவது வாதில் வழியாக நாம் இறைவனின் நாபியில் இருந்து தாமரை மலரில் எழுந்தருளும் பிரம்ம தேவனையும், ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி அன்னைமார்களையும், மகா விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகளையும், இதர விக்ரகங்களையும் நாம் காணலாம், மேலும் மூன்றாவது வாதில் வழியாக இறைவனின் திருவடிகளை மனமுவந்து சேவிக்கலாம். இந்த "ஒற்றைக்கல் மண்டபத்தில்" வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகா ராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த "ஒற்றைக்கல் மண்டபத்தில்" இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த மகா ராஜா என்பவர் கூட "பத்மநாப தாசராக", அல்லது இறைவன் மகா விஷ்ணுவின் சேவகனாக, போற்றப்படுகிறான். மதப்பற்று கொண்டுள்ள அனைவரும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தை ஆட்சி புரிவது மகா விஷ்ணுவே ஆகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஸ்ரீ பத்மநாப சுவாமி மகாத்மியம்
அனந்த சயனத்தில் காணப்படும் இறைவனின் விக்ரகம் 12008 சாலிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த சாலிக்ராமங்கள் தனிப்பட்டவையாகும், ஏன் என்றால் அவை நேபாள நாட்டை சார்ந்ததாகும் மேலும் புனிதமான கண்டகி நதிக்கரையில் இருந்து பெற்றவையாகும், மேலும் ஆடை அலங்காரம் மற்றும் மேள தாளத்துடன் அவற்றை யானைகளில் மேல் வைத்து வழிபட்டுக்கொண்டே இங்கு எடுத்து வரப்பட்டதாகும். இறைவனின் சிலை வடிவத்தின் மீது, அதற்குப் பின்னர், "காடுசர்க்கரை யோகம்", நவரத்தினங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட ஆயுர்வேதக் கலவை ஆகியவற்றைக் கொண்டு மேல் பூச்சு பூசியதாகும். இறைவன் மீது அளவற்ற பற்று கொண்டவர்கள் இன்றும் இறைவனே நேராக பல முறைகள் எழுந்தருளி திருவாங்கூர் சமஸ்தானத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி இருப்பதாக அடித்துக் கூறுகின்றனர்.
நைவேத்யம்
பெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்யம் பொதுவாக அரிசியால் ஆன பிரசாதம் இங்கு வழங்கப்பட்டாலும், சில நேரங்களில், அடியார்களின் விருப்பத்திற்கு இணங்க, இதர பிரசாதங்களையும் இறைவனுக்கு படைத்து பிரசாதமாகப் பெறலாம்.
அவற்றில் இரத்தின பாயாசம் என்பது இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைத்த பாயாச வகைகள்.
மேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், நெய்யால் சுவையூட்டியது.
ஒற்றை துலா பாயாசம், பால் மாங்கா, பந்தரனு கலப் பாயாசம், மற்றும் பால் பாயாசம் போன்றவை அனைத்தும் மிகவும் பிரபலமாகும்.
வியாழக்கிழமைகளில், இறைவன் நரசிம்ஹருக்கு சிறப்பான பானக நைவேத்தியம் வழங்கப்பெறும்.
இறைவனுக்கு உண்ணி அப்பம், மோதகம், வேல்லத்துடன்கூடிய அவல் பிரசாதம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்தக் கோவிலின் சிறப்பான நைவேத்யம் உப்பு மாங்காய் ஆகும், (பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப்புக்கரைசலில் ஊறவைத்தது), அது ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. 
நம்மாழ்வார் மங்களாசாசனம்
இக்கோயிலில் நம்மாழ்வாரின் பாடல்கள் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
திருவிழாக்கள்
இந்தக் கோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பல திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசித் திருவிழா அக்டோபர்-நவம்பர் மாதங்களிலும், பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரில் மாதங்களிலும், பத்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடடுகிறார்கள். கடைசி நாளன்று ஆறாட்டு விழாவிற்காக (ஆற்றில் புனித நீராடுதல்) ஆலயத்திலிருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தத் திருவிழாக்கள் முடிவு பெறுகின்றன. ஆறாட்டு என்பது கோவில் விக்ரஹங்களை கடலில் நீராட்டி புனிதப்படுத்துவதை குறிப்பதாகும். இந்தச்சடங்கு மாலைவேளையில் நிறைவேற்றப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா கால்நடையாக மெய்க்காவலராக இந்த ஆறாட்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நடத்திச்செல்வார். குறிப்பிட்டுள்ள பூஜைகளை நியமப்படி செய்து முடித்த பின்னர், கடலில் ஸ்ரீ பத்மனாபஸ்வாமி, கிருஷ்ணர் மற்றும் நரசிம்ஹரின் திவ்ய விக்ரகங்கள் முறையாக கடலில் சம்பிரதாயப்படி குளிப்பாட்டப் படுகின்றன. சடங்குகள் முடிந்த பிறகு, இந்த விக்ரகங்கள் மறுபடியும் மேளதாளத்துடன் மற்றும் பாரம்பரிய விளக்குகளுடன், கோவிலுக்கு மறுபடியும் திரும்ப அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.
ஸ்ரீ பத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாபஸ்வாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமிரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது.
இந்தக் கோவிலில் லக்ஷ தீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லக்ஷம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக்கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு வேத பாராயணம் நடைபெறும். திருவிழா நாள் அன்று இரவு, நூறு ஆயிரம் எண்ணை விளக்குகள் கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் எரிய விடப்படுகிறன. அடுத்த லக்ஷ தீபம் திருவிழா ஜனவரி 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
தரிசன நேரம்
தரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00; (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20. இந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியுள்ளது.
கோவில் விதிமுறைகள்
பக்தர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட ஆடை அணிகலன்களையே அணிய வேண்டும். ஆண் மக்கள் இடுப்பிற்கு மேல் அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி கோவில் பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும்.
இரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது. இதன் பொருளானது ஆண் மக்கள் கால்சட்டைகள் அணியக்கூடாது மற்றும் பெண்கள் சூரிதாரை அணியக்கூடாது.
லாக்கர் (பாதுகாப்பு பெட்டகம்) அறையில் இருந்து தோதிகளை வாடகைக்குப் பெறலாம் அதற்கான கட்டணம் ரூபாய் 15.
கால்சட்டைகள் அல்லது சூரிதார் மேல் ததியை அணியலாம்.
கோவிலுக்கு உள்ளே தொலைபேசிகள் (கைபேசிகள்) மற்றும் காமராக்கள் கொண்டு செல்லக்கூடாது.
தொலைபேசிகளை கோவில் லாக்கரில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம், அதற்கான கட்டணம் ஒரு தொலைபேசிக்கு ரூபாய் பதினைந்து ஆகும். கைப்பைகளை கோவிலின் உள்ளே கொண்டு செல்லலாம்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க