tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் குலதெய்வம் மானூர் அம்பலவாணசுவாமி திருநெல்வேலி மாநகரிலிருந்து வடக்கே 15கி.மீ தூரத்தில், சங்கரன்கோவில் செல்லும் வழிப்பாதையில் அமையப் பெற்றுள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பரின் ஆறுசபைகளுள் ஒன்றாக திகழும் இங்கு ஆவணி மூலம் மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும். 

அதிலும் ஆவணி மூலம் அன்று திருநெல்வேலியில் இருந்து இங்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளி, கருவூர் சித்தருக்கு காட்சியளிப்பார்கள் அன்று சுற்றுப்பகுதி கிராம மக்கள் அனைவரும் திரண்டு திருவிழாவாகவே கொண்டாடுவார்கள் என்பது சிறப்பம்சம். 

இது இறைவனின் நடன சபைகளுள் ஒன்றாக விளங்குவதால், இக் கோவிலுக்கென தனி தீர்த்தமோ, தல விருட்சமோ இல்லை.
இந்த திருக்கோவிலைப் பற்றி திருநெல்வேலி தலப் புராணத்தில் இரண்டு சருக்கங்களில் பாடப் பெற்றுள்ளது. 

இங்குள்ள தூண்களில், சோழர்கால குடவோலை முறையைக் குறிப்பிடும் உத்திரமேரூர் கல்வெட்டை விட காலத்தால் முந்தைய பழமையான சிறப்புமிக்க மானூர்க் கல்வெட்டுகள் இருக்கின்றன.
இத்திருக்கோவிலில் வடகிழக்கு மூலையில் உள்ள தூணின் அடிப்பகுதியில் ஆமையுடன் கூடிய இரண்டு அன்னப்பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. "மானூர் அம்பலத்தின் வடகிழக்கு மூலையில் ஆமையும் அன்னமும் கண்டதார்?" என ஒரு வாக்கியம் இங்கே வழங்கி வருகிறது. இங்கு இந்த ஆமையும், அன்னமும் அம்பலவாணரை வழிபட்டு வீடுபேறு பெற்றதாக தகவல்கள் கூறப்படுகின்றன. 

கிழக்கு நோக்கிய இத் திருக்கோவில் முன் பக்கம் குளத்தோடு அமையப் பெற்றுள்ளது. கிழக்கு வாயில் பகுதியில் கொடிமரம், பலிபீடம் என இருந்தாலும், தெற்கு வாயிலே இங்கு பிரதானமாக உள்ளது. கிழக்கு வாயில் விழாக் காலங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. 

திருக்கோவில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் வடதிசை நோக்கி "திருவடி போற்றி" என்னும் சன்னதி, தற்போது "திருவாளி போத்தி" என்று பெயர் மருவி அழைக்கப்படுகிறது . இவரை பாண்டிய மன்னன் வட தேசத்திலிருத்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த சக்தி வாய்ந்த ஸ்தூபி வடிவம் என்று சிறப்பித்துக் கூறுகிறார்கள். 

தெற்கு வாயில் வழியே படிகள் ஏறி உள்ளே சென்றால் நேராக அம்பலவாணர் சன்னதி. அவருக்கு முன்புறம் கிழக்கு நோக்கிய தனித் தனி சன்னதிகளில் சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி எதிரே தனித் தனி நந்தியோடு காட்சியளிக்கிறார்கள். 

உள் சுற்றில் பரிவார மூர்த்திகளாக கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கருவூர் சித்தர், சுப்பிரமணியர், அம்பலவாண லிங்கர், சனீஸ்வரர், பைரவர் ஆகியோர் எழுந்தருளி உள்ளார்கள். 

வாயு மூலையிலே கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கம்பீரமான அழகோடு கையினிலே தண்டோடு , இடையிலே சிறு ஆடையோடு கைகள் வணங்கிய நிலையிலே கரூர் சித்தர் காட்சி அளிக்கிறார். 

தெற்கு நோக்கிய சபையில் அம்பலவாணருக்கு காட்சியளித்த நடராஜர், சிவகாமி அம்மை மற்றும் மாணிக்கவாசகரோடு உற்சவத் திருமேனியாய் எழுந்தருளி காட்சியளிக்கிறார்கள். அம்பலவாணருக்கு காட்சியளித்து அவரின் பெயரிலேயே நடராஜர் விளங்கி வருவது சிறப்பம்சம். இங்கு அம்பலவாண லிங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

முற்காலத்தில் அம்பலவாண முனிவர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஈசன் மீது அளவிலா பக்தி. அதிலும் ஈசன் ஆடும் திருநடனத்தின் மீது அளவு கடந்த நாட்டம் கொண்டிருந்தார். அவரின் தூய பக்திக்கு இறங்கி, இங்கு சுவாமி நெல்லையப்பர் திருநடன காட்சி காட்டியதாகவும், அந்த திருநடனக் காட்சியுடன் எழுந்தருளியிருக்கும் நடராஜரே, இங்கு முனிவர் பெயரினால் அம்பலவாண சுவாமி என்னும் பெயரில் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகிறார்கள் 

இந்த கோவிலோடு கருவூர் சித்தருக்கும் வரலாற்று தொடர்பு உள்ளது. கருவூர் சித்தர் சிவ தல யாத்திரை மேற்கொண்ட போது ஒரு முறை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வருகிறார். தான் அழைத்தவுடன் தனக்கு இறைவன் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தினை பெற்றிருந்த கருவூர் சித்தர், நெல்லை கோவில் வாசல் வந்து அங்கு உறையும் சுவாமி நெல்லையப்பரை, "நெல்லையப்பா" என மூன்று முறை அழைத்தும் இறைவன் செவி சாய்க்காத காரணத்தால், கோபமுற்ற சித்தர் இங்கு இறைவன் இல்லை எனவே எருக்கும் குருக்கும் சூழக் கடவது என சாபமளித்து விட்டு, வடதிசை தோக்கி பயணமாகிறார். அப்படி வரும் வழியில் இங்கு மானூரில் அம்பலவாண முனிவரை சந்திந்து நடந்ததைக் கூற, அவரோ தாமதாக வந்தாலும் தாமகவே வந்து தரிசனம் தருவான் ஈசன் எனக் கூறி சித்தரை ஆற்றுதல்படுத்துகிறார். அதே வேளை கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதியோடு தோன்றி காட்சியளித்து இருவருக்கும் அருள்புரிந்தார்கள். தன்னை தேடி வந்து தரிசனம் அளித்த சிவபெருமானின் மீது கொண்ட அன்பினால், கருவூர் சித்தர் மீண்டும் திருநெல்வேலி எழுந்தருளி இறைவன் இங்கு உள்ளார், எனவே எருக்கும் குருக்கும் நீங்கக்கடவது என சாப விமோசனம் அளித்தார்.
இதனை கருத்தில் கொண்டே இங்கும் சுவாமி நெல்லையப்பராகவும், அம்மை காந்திமதியாகவும் எழுந்தருளி காட்சிதருகிறார்கள்.
திருநெல்வேலியில் மாநகரில் விளங்கி வரும் நெல்லையப்பர் திருக்கோவிலில், தாமிரபரணியோடு சம்பந்தப்பட்ட நிறைய வழிபாடுகள் உண்டு. இந்த தாமிரபரணி நதி நெல்லை நகர் வழியாக பயணித்து அடுத்ததாக தடுக்கப்படும் இடமாக அப்போது மருதூர் அணைக்கட்டு இருந்துள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காலை நடைதிறக்கப்பட்டவுடன் முன்னர் சாத்தப்பட்ட அலங்காரங்கள் களையப்பட்டு, அந்த நிர்மாலயங்கள் (அதாவது சுவாமிக்கு சாத்தி களையப்பட்ட பூக்கள் மற்றும் பொருட்கள்) தினமும் யானை மீது வைத்து கொண்டு வரப்பட்டு தாமிரபரணியில் சேர்க்கப்படுமாம். பின்னர் தாமிரபரணி நீரை தினமும் குடங்களில் நிரப்பி, யானை மீது வைத்து வீதி உலாவாக கொண்டு வந்து சுவாமி அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாம்.இங்கு இப்படி தாமிரபரணியில் சேர்க்கப்படும் நிர்மாலய பிரசாதங்கள் தண்ணீரில் மிதந்து வந்து, அடுத்த தடுப்பணையான மருதூர் அணைக்கட்டிற்கு வந்து தங்குமாம். முற்காலத்தில் இந்த அணைக்கட்டில் முன்வினைப் பயனால் ஆமையாகவும், அன்னமாகவும் பிறந்த இரண்டு உயிர்கள் வாழ்ந்து வந்ததாம்.இந்த ஆமையும், அன்னமும் முன்வினைப் பயனால் இப்பிறவி எடுத்திருந்த காரணத்தால் சுவாமி நெல்லையப்பர் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார்களாம். இதனால் தினமும் தாமிரபரணியில் மிதந்து வரும் நிர்மாலயங்களை இறைவனின் பிரசாதங்களாக கண்டும், பெற்றும் மகிழ்வார்களாம்.இப்படி இருக்கையில் இந்த ஆமைக்கும், அன்னத்திற்கும் அருள் செய்ய திருவுளம் கொண்ட சுவாமி நெல்லையப்பர் ஓர் அற்புத நிகழ்வை நிகழ்த்துகிறார். கருவூர் சித்தர் திருநெல்வேலி எழுந்தருளி இறைவன் பெயரை கூறி அழைத்ததும், இறைவன் செவி சாய்க்காத காரணத்தால் எருக்கு எழுக என சாபமிட்டு சென்றது பற்றி அறிந்தோம். அந்த காரணத்தால் திருநெல்வேலியில் எருக்கு முளைத்தது. இதனால் தாமிரபரணியிலும் எருக்கம் பூக்களாக மிதந்து வந்ததை கண்ட ஆமையும், அன்னமும் பதறிப் போய் ஏதோ ஆபத்து என அறிந்து அங்கிருந்து அன்னப் பறவை, ஆமையை தூக்கிய படி பறந்து திருநெல்வேலி வர, அதே நேரம் சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சியளிக்க மானூர் எழுந்தருளியிருக்க, இந்த அன்னமும், ஆமையும் நேரே மானூர் வந்து சேர, இங்கு சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கும், அம்பலவாண முனிவருக்கும், ஆமை, அன்னத்திற்கும் ஒரு சேர தரிசனம் நல்கி ஆட்கொள்கிறார். பின் அன்னத்திற்கும், ஆமைக்கும் அருள்புரிந்து வீடு பேறு அளித்தார் என்பது கூடுதல் சிறப்புமிக்க தகவல்களாக அறியப்படுகிறது.
இதனை இன்றும் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலின் வடகிழக்கு மூலையில் ஆமையும், அன்னமும் கல்லில் சித்திரமாக வடிக்கப்பட்டிருப்பதை நாம் கண்டு உணரலாம்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க