tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கார்த்திகை மாத சிறப்புகள்

 

கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8 வது மாதமாகும் ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது.

 

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவை வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை.

 

ஒசில பொது விஷயங்களை மட்டும் இங்கே காணலாம்.

 

அக்னி ரூபாமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

 

கார்த்திகை நட்சத்திரத்திற்கான அதிபதி சூரியன் அதனால் தான் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று விளக்கேற்றி சிறப்பான முறையில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 

அத்துடன் பெரும்பாலான கோயில்களிலும், வீடுகளிலும் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை விளக்கேற்றி வைக்கும் பழக்கமும் உண்டு. இது நமக்கு சர்வ மங்களங்களையும் தரும் என்பது ஐதீகம்

 

எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்திலோ, ஊரிலோ எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடு. ஆதியில் வேத ரிஷிகள் ஹோமம் செய்து இறைவனை வழிபட்டனர் அப்போது, யாககுண்டங்களில் அக்னி எரியும் இதுவே எளிமையாக்கப்பட்டு தீப வழிபாடாக மாறியது

 

விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, அதனை வீட்டு பூஜையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம்

ஆடி மாதம் அறிதுயில் கொள்ளும் விஷ்ணு பகவான் இந்த மாத ஏகாதசியில் தான் விழித்தெழுகிறார் என்பது ஐதீகம் எனவே விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் தாமரை மலர்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய முடியா அரிதான மோட்ச நிலையை அடைவார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன

 

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள் என்கின்றன புராணங்கள்.

 

கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள்.

 

கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

 

இந்த மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு செல்கின்றனர்.

 

விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத்

 

"திருமண மாதம்" என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகிறது.

 

கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது.

 

அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.

 

மேலும், கார்த்திகை மாதத்தில், வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும்.

எம் அசோக்ராஜா _______

அரவக்குறிச்சிப்பட்டி ____

திருச்சி __620015__________

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க