tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

🛕இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட சாமி கும்பிடும் முன்பாக தானம் செய்வதால் புண்ணியம் அதிகரிக்கும்.

🛕கோவிலுக்கு எப்போதும் வெறும் கையுடன் செல்லக்கூடாது.பழம்,பூ,எண்ணெய்,காணிக்கை இதில் எதாவது ஒன்றை வலது கையில் கொண்டு செல்ல வேண்டும்.உடல்,ஆடை,மனம் எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும்.பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும்.

🛕மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி கும்பிடக்கூடாது.வாகனங்களில் சென்ற படியே கடவுளை வணங்கக் கூடாது.அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.

🛕கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.கோபுரத்தினை ஆண்கள் தலைக்கு மேல் இரு கைகளையும் குவித்தும்,பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்க வேண்டும்.

வேண்டுதல்களை கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.கொடி மரம் இல்லாத கோவில்களில் பிள்ளையாரை துதித்து விட்டு பிரகாரத்துக்குள் நுழைய வேண்டும்.பலி பீடத்திற்கு அருகில் சென்று வணங்கி நம்மிடமுள்ள காம,குரோத,லோப, மோக,மத,மாத்சரியும் என்னும் ஆறு தீய குணங்களை பலி கொடுத்ததாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

🛕அம்மன் கோவிலில் பலி பீடத்தில் சிறிது உப்பு,மிளகைக் கொட்டி பிராத்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.பலி பீடத்தை குறைந்தது மூன்று முறை அல்லது ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

🛕பிள்ளையாரை வணங்கும் போது தோப்புகரணம் போட்டு,நெற்றி பொட்டுகளில் லேசாகக் குட்டிக் கொள்ள வேண்டும்.இதனால் காது மற்றும் முக்கிய ஜீவப் புள்ளிகள் தூண்டப்பட்டு,புத்துணர்வு கொள்வதாக விஞ்ஞானம் சொல்கிறது.

🛕ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும்,எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ,குறுக்கே செல்வதோ கூடாது.தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம்.

🛕தெய்வ வாகனங்களின் வாலை பக்தியிடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.கோவிலில் பிரகாரங்களை வலம் வரும் போது வேகமாக நடக்கக் கூடாது.மெல்ல நடக்க வேண்டும்.

🛕திருக்கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்திலும்,மூடியிருக்கும் நேரத்திலும்,திருவிழாவில் சுவாமி உலா வரும் நேரத்திலும் கோவிலில் தெய்வத்தை வணங்குவதோ,பிரதட்சணம் செய்வதோ கூடாது.

🛕அபிஷேகம் நடந்தால் பிரகாரத்தை சுற்ற கூடாது.அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

🛕விநாயகருக்கு ஒரு பிரதட்சணமும்,லிங்கம்,முருகன்,தக்ஷிணாமூர்த்தி,அம்மன் போன்ற மூர்த்திகளுக்கு மூன்று பிரதட்சணமும்,விஷ்ணுவுக்கும் தாயாருக்கும் நான்கு பிரதட்சணமும்,அரச மரத்திற்கு ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும்.மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து,துவாரபாலகர்களின் முன் சென்று,இறைவனை தரிசிக்க அனுமதி தந்து அருளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

🛕சிவன் கோவிலாக இருந்தால் முதலில் #சிவனையும் பிறகு #அம்பாளையும் வணங்க வேண்டும்.

🛕பெருமாள் கோவிலில் முதலில் #மகாலக்ஷ்மியை வணங்கி,பிறகு #பெருமாளை வணங்க வேண்டும்.

🛕சாமிக்கு அர்ச்சனை செய்து,ஆரத்தி காட்டியதும் பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.பிரசாதம்,தீர்த்தம்,சடாரி,நைவேத்தியம் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு வருவது நல்லது.

🛕விபூதி,குங்குமம் போன்ற பிரசாதங்களை கோவில்களின் தூண்களில் பூசுவதோ,தீர்த்தத்தை தரையில் சிந்த விடுவதோ கூடாது.

🛕பெருமாள் கோவில்களில் நவக்கிரக வழிபாடு இல்லை.#ஸ்ரீ #சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.

🛕சிவன் கோவில்களில் நவக்கிரங்களுக்கு தனி சந்நிதி இருக்கும்.மூலவரைத் தரிசித்து வெளியே வந்ததும்,நவக்கிரக தரிசனம் செய்து ஒன்பது முறை பிரதட்சணம் செய்வது நலம்.

🛕சிவன் கோவில்களில், கடைசியாக வணங்க வேண்டியவர் சண்டிகேஸ்வரர்.ஈசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரை தரிசித்து சத்தம் எழுப்பாமல் வணங்க வேண்டும்.

 

🛕கோவில்களில் செய்யக் கூடாதவை🛕

🍃கோவிலை அசுத்தம் செய்யக் கூடாது.

🍃எச்சில் துப்பக்கூடாது,தூங்கக் கூடாது,நம்மைவிட சிறியவர் கையிலிருந்து விபூதியை எடுத்து நாம் தரிக்கக் கூடாது.

🍃கோவிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக் கூடாது.சத்தமாக சிரிக்க கூடாது,மொபைலில் பேசவும் கூடாது.

🍃சிவன் கோவிலாக இருந்தால் சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து சிவகனங்களை அங்கேயே விட்டு செல்ல வேண்டும்.

🍃பெருமாள் கோவிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் சென்றால் லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம்.

🍃பிரதான துவராபாலகர்களை மறுபடியும் மானசீகமாக வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு, மறுபடியும் கொடி மரத்திற்கு எதிரில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வெளியில் வர வேண்டும்.

🍃கொடிமரம்,நந்தி,பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.குளிக்காமல் கோவிலுக்கு போகக் கூடாது.

🍃கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடக்கூடாது.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.

🍃மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.படிகளில் உட்கார கூடாது.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது.எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது.

🍃வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது.

🍃கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.

🍃புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக் கூடாது.முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

🍃கோவிலுக்கு போய் விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும்.வேறு எங்கும் போக கூடாது.

🍃வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாது.வீட்டிற்குள் அப்படியே செல்ல வேண்டும்.அப்போது தான் #கடவுளிடம் நாம் கோவிலில் பெற்ற வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.

 

ஓம் நமசிவாய

அன்பே #சிவம்.✍🏼

எம் அசோக்ராஜா ____

அரவக்குறிச்சிப்பட்டி_

திருச்சி __620015__

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க