tamilnaduepaper
❯ Epaper

ஜெயதீர்த்தர்

ஜெயதீர்த்தர்
Join Whatsapp Channel Join Telegram Channel

துவைத சித்தாந்தத்தை நிறுவிய ஆசார்ய மத்வருக்கு பிறகு வந்த மத்வ சந்நியாசிகளில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மல்கேடாவில் ஜீவ சமாதியான ஜெயதீர்த்தர் மிகவும் முக்கியமானவர்.நாளை அதாவது ஆஷாடமாதம் கிருஷ்ணபக்ஷ பஞ்சமி (25.07.2024) அவரது புண்யதினம்.அவரைப்பற்றி நான் எழுதிய ஒரு வாழ்க்கை குறிப்பு தங்கள் மின்னிதழில் பிரசுரிக்கவேண்டி அனுப்பியிருக்கிறேன்.

 

ஜெயதீர்த்தர்

------------------------

 

"தத்வவாத" என்று கூறப்படும் "த்வைத" சித்தாந்தத்தை நிலைநாட்டியவர் ஆசார்ய மத்வர் (மத்வாசாரியார்) என்று நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவர் வாழ்ந்த கால கட்டம் 1238 - 1317.அக்ஷோபிய தீர்த்தர் (1282-1365) மத்வாசாரியரிடமிருந்து நேரடியாக சந்நியாசம் பெற்றவர். 

 

அக்ஷோபிய தீர்த்தர் தனக்குப்பிறகு மடாதிபதியாக நியமிக்க தகுந்த ஒருவரை தேடிக் கொண்டிருந்தார்.ஒரு நாள் அக்ஷோபிய தீர்த்தர் பீமாரதி நதிக்கரையில் அமர்ந்திருந்தபோது அங்கே குதிரையில் வந்த தோண்டுராயா என்ற ஒரு அழகான இளைஞன் குதிரையின்மேல் அமர்ந்தபடியே தன் கைகளைக்கூட உபயோகிக்காமல் அப்படியே குனிந்து நதி நீரைக் குடித்தான். அதைப்பார்த்த அக்ஷோபிய தீர்த்தர் அவனிடம் சத்தமாக கூவி கேட்டார் " கிம் பஷூ பூர்வதேஹே" அதாவது "முன் ஜென்மத்தில் நீ மிருகமாக இருந்தாயோ" என்று.

 

அதைக்கேட்டதும் ஸ்தம்பித்துப்போன தோண்டுராயாவுக்கு தன் பூர்வ ஜென்ம ஞாபகம் வந்து விட்டது.

ஆம் அவன் பூர்வஜென்மத்தில் ஒரு எருதாக இருந்தான்.அது எப்படி?

 

மகாபாரதப் போர் முடிந்ததும் பாண்டவர்கள் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது அர்ஜூனன் போரில் பாண்டவர்கள் வெற்றிக்கு தானே காரணம் என்று தற்பெருமையாக பேசினான்.அதைக்கேட்ட பீமன் "கிருஷ்ணன் நமக்கு செய்த உதவியை மறந்து விட்டாயா அர்ஜூனா?இப்படி நீ பேசுவது மிருகத்தனமாக அல்லவா இருக்கிறது "என்று

 

இதைக்கேட்டதும் அர்ஜூனன் தன் அகம்பாவத்தால் கிருஷ்ணன் செய்த உதவிகளை ஓரு கணம் மறந்து இது போல் பேசியதற்கு மிகவும் வருந்தினான். அந்த அர்ஜூனனே அடுத்த ஜென்மத்தில் எருதாக பிறந்தான் மத்வாசாரியார் வாழ்ந்த காலத்தில். எருதாக பிறந்தாலும் அந்த எருதுக்குத்தான் என்ன பாக்கியம்.அது மத்வாச்சாரியார் எங்கு சென்றாலும் அவர் எழுதிய சர்வ மூல கிரந்தங்களை யெல்லாம் அங்கு சுமந்து சென்றது ஒரு பதினெட்டு ஆண்டு காலம்.அது எப்போதும் ஆசார்ய மத்வருக்கு அருகிலேயே அமர்ந்து அவர் சிஷ்யர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்குமாம்.

 

ஒருநாள் ஆசார்ய மத்வர் தன் சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு சிஷ்யன் அவரிடம் கேட்டார் அவர் எழுதிய கிரந்தங்களுக்கெல்லாம் உரை எழுதப்போவது யார் என்று. சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆசார்ய மத்வர் தன் பெயரை சொல்லப் போகிறார் என்று. ஆனால் ஆசார்ய மத்வர் சொன்னார் அருகில் இருந்த எருதைக்காட்டி "இதோ இந்த எருதுதான் என் கிரந்தங்களுக்கு உரை எழுதப்போகிறது " என்று.

 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிஷ்யர்கள் அந்த எருது பாம்பு கடித்து சாகவேண்டும் என்று சாபம் கொடுத்தனர். சில காலத்திற்குப் பிறகு அந்த எருது இறந்து விட்டது. இப்பொழுது புரிந்திருக்கும் உங்களுக்கு குதிரையில் வந்த அந்த அழகான இளைஞன் தோண்டுராயா தான் முற்பிறவியில் அந்த எருதாக இருந்திருக்கிறான் என்று.

 

தோண்டுராயா மராட்டி மொழி பேசும் தேசிஸ்த பிராமணர் குடும்பத்தில் பிறந்தவன். மகாராஷ்டிரத்தில், பந்தர்புராவில் இருந்து பன்னிரண்டு மைல் (தற்போது பாண்டுரங்கவிட்டலன் இருக்கும் விஷேச தலமான பண்டரிபுரம்) உள்ள மங்கள்வேதே மாவட்டத்தில் பிராமண ராஜவான ரகுநாத் தேஷ்பாண்டே மற்றும் சக்குபாய் தேஷ்பாண்டே என்ற தம்பதிக்கு மகவாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் தோண்டுபந்த் ரகுநாதா.ராஜ உபசாரம். கல்வி, குதிரை சவாரி, வாத வல்லமை, சமயோசித புத்தி என்று அனைத்திலும் முதல் மாணவனாக விளங்கினான் தோண்டுராயா.

 

தோண்டுராயா அக்ஷோபிய தீர்த்தரின் காலில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தனக்கு சந்நியாசம் கொடுத்தருள வேண்டினான். அக்ஷோபிய தீர்த்தருக்கு ஒரே சந்தோஷம். ஆனால் அதற்கு வீட்டில் பெரியவர்களின் அனுமதி வேண்டும் என்று கூறினார் தோண்டுராயாவிடம்.

தோண்டுராயா அது அவசியமில்லை எனக்கு சந்நியாசம் கொடுங்கள், என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினான். 

 

அந்த சமயம் அங்கு வந்த தோண்டுராயாவின் தந்தை மகனை தன்னுடன் வருமாறு அழைத்தார். தோண்டுராயா தன் தந்தையிடம் கூறினான் தான் அக்ஷோபிய தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றதாகவும் அவர் தன்னை வற்புறுத்தி கொடுக்கவில்லை என்றும் கூறினான். ஆனாலும் கடும் கோபத்தில் இருந்த தோண்டுராயாவின் தந்தை தோண்டுராயாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டார்.

 திருமணம் நடந்திருந்தும் தோண்டுராயாவின் மனைவி பாமாமணி அவருடைய தாய் வீட்டிலேயே இருந்தார். அன்று பாமாமணியை அவருடைய தாய் வீட்டிலிருந்து அழைத்து வந்து தோண்டுராயாவுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்தார் தோண்டுராயாவின் தந்தை.அன்று தோண்டுராயனின் மனைவி அறைக்குள் சென்று தோண்டுராயாவைப் பார்த்தபோது அவர் கண்களுக்கு தோண்டுராயா தெரியவில்லை. படம் எடுத்து அமர்ந்திருந்த நாகமே கண்ணில் தெரிந்தது. அலறிக்கொண்டு வெளியே வந்தார் பாமாமணி. இதையறிந்த தோண்டுராயாவின் தந்தைக்கு புரிந்துவிட்டது தோண்டுராயா ஒரு சாதாரண மனிதன் அல்ல தெய்வாம்சம் பொருந்தியவனாக இருக்கவேண்டும் என்று. தான் தவறு செய்து விட்டதை அறிந்து தோண்டுராயாவை அழைத்துச்சென்று அக்ஷோபிய தீர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

 

தோண்டுராயாவுக்கு சந்நியாசம் கொடுத்து ஜெயதீர்த்தர் என்று பெயர் சூட்டினார் அக்ஷோபிய தீர்த்தர்.ஆசார்ய மத்வர் எழுதிய சர்வ மூல கிரந்தங்களை எல்லாம் தான் எருதாக இருந்தபோதே கேட்டிருந்தாலும், அக்ஷோபிய தீர்த்தரிடம் நன்கு கற்றறிந்தார்.சரஸ்வதி, பாரதி தேவியின் கடாக்ஷத்தால் நல்ல வாதத்திறமை பெற்றிருந்தார். 1365 ஆம் ஆண்டு மத்வ பீடத்தின் ஆறாவது மடாதிபதியாக அமர்ந்தார்.அவர் மடாதிபதியாக இருந்த 23 ஆண்டுகளில்  

22 படைப்புகள் வெளியிட்டார்.அதில் 18 படைப்புகள் ஆசார்ய மத்வரின் கிரந்தங்களுக்கு எழுதிய உரையே.ஆசார்ய மத்வரின் கிரந்தங்களுக்கு உரை (சமஸ்கிருதத்தில் டீகா என்றால் உரை என்று அர்த்தம்) எழுதியதால் அவருக்கு "டீகாசார்யா" என்ற பெயரும் உண்டு.அவர் எழுதிய நியாய சுதா,தத்வ ப்ரகாசிகா,ப்ரமேய தீபிகா மற்றும் நியாய தீபிகா என்ற நான்கு படைப்புகளில் "நியாய சுதா" தலைசிறந்ததாக கருதப்படுகிறது.கர்நாடகா மாநிலத்தில் யாத்கிர் மாவட்டத்திலுள்ள சித்தாபூர் என்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள "யெரகோலா" என்ற இடத்திலுள்ள குகையில் இருந்துகொண்டு இந்த நூலை எழுதினார் ஜெயதீர்த்தர் என்று கூறப்படுகிறது.

 

ஜெயதீர்த்தர் 1388ஆம் ஆண்டு குலபர்கா மாவட்டத்தில் உள்ள மல்கேடா என்ற ஊரில் காகினி நதிக்கரையில் ஜீவ சமாதி அடைந்தார். அவருடைய பிருந்தாவனம் அவருடைய குருவான அக்ஷோபிய தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு அருகிலேயே உள்ளது.

 

இருபத்தி இரண்டு படைப்புகள் செய்த ஜெயதீர்த்தர் ஆசார்ய மத்வரைப் பற்றி கூறிய வாசகங்கள் இதோ கீழே!

 

"ஆசார்ய மத்வரின் கிரந்தங்களுக்கு உரை எழுதும் திறன் கடவுளர்களுக்கு மட்டுமே உண்டு.அதற்கு நான் உரை எழுதியிருக்கும் முயற்சி எனக்கு ஒரு வேடிக்கையாகத்தான் படுகிறது.ஆனால் நான் ஆசார்ய மத்வரின் மேல் பக்தி சிரத்தையோடு இதை எழுதியிருக்கிறேன் "

 

எப்பொழுதெல்லாம் நம் மனதில் நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்ற அகம்பாவம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மேற்கூறிய ஜெயதீர்த்தரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தால் அந்த அகம்பாவம் அந்த நொடியே மறைந்துவிடும்.

 

இன்று (25th July 2024)ஆஷாட மாதம் கிருஷ்ணபக்ஷ பஞ்சமி ஸ்ரீ ஜெயதீர்த்தரின் புண்யதினம்.அவரை மனதில் நினைத்து வேண்டி அவர் அருளுக்கு பாத்திரர்களாவோம்.

 

கிருஷ்ணார்பணமஸ்து!

 

By முரளிதரன் ராமராவ் , புனே

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க