tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும்.*

 

*பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் ,

 

* பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும்.*

 

*பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது.*

 

 *பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.*

 

*பௌர்ணமியில் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட, வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.*

 

🔯1. சித்திரை : இந்த பௌர்ணமி சித்ரா பௌர்ணமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நாம் முறையாக பூஜை செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நைவேத்யமாக எலுமிச்சை சாதம், பானகம், ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் வைக்க செல்வம் நிலைக்கும். தானியம் பெருகும்.

 

🔯2. வைகாசி : இப் பௌர்ணமி விரதம் செய்தால் பிறவா நிலையை அடையலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலும், விளாம்பழமும் வைப்பது சிறப்பானது. இதனால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.

 

🔯3. ஆனி : இந்ந மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், காரிய வெற்றி கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சுபமாக முடியும். நைவேத்தியமாக உளுந்தம் பருப்பு சாதமும், முக்கனிகளையும் படைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்நாளில் சாவித்திரி பூஜை செய்வது மாங்கல்ய பலம் அதிகரிக்க செய்யும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை உண்டாகும் என்பது உண்மை.

 

🔯4. ஆடி : ஆடி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசே~மானது. அன்றைய தினத்தில் நம் குல தெய்வத்தை நினைத்து, மந்திரங்கள் ஜபித்து, விரதம் அனு~;டித்து அம்மனுக்கு பால் அபிN~கம் செய்து, வாழைப்பழத்தை சாதத்துடன் கலந்து நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும். ஆடி மாத பௌர்ணமியிலும ஸ்ரீ சாவித்திரி விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும். வடமாநிலத்தவர்கள், கோபத்ம விரதம், ஸ்ரீ சாவித்ரி விரதம் இந்த பௌர்ணமியில் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

🔯5. ஆவணி : இந்த பௌர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும் . இந்த நாளில் ஸ்ரீ அம்பிகையை துதித்து விளக்கேற்றி , நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

 

🔯6. புரட்டாசி : புரட்டாசியில் வரும் பௌர்ணமி அன்று விரதமிருந்து திருமாலை வணங்கி, மாவிளக்கு இட்டு. வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் நடைபெறும். குடும்பத்தில் ஸ்ரீ லட்சுமி கடாட்சம் உண்டாகும். புராட்டாசி பௌர்ணமிக்கு நைவேத்தியமாக இளநீர் படைப்பது விசே~மானது.

 

🔯7. ஐப்பசி : ஐப்பசியில் வரும் பௌர்ணமி விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் பசி, பிணிகள் நீங்கும். வெண் பொங்கலும், நெய் பொங்கல் படைத்து ஸ்ரீ அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

🔯8. கார்த்திகை : கார்த்திகை மாத பௌர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி ஈசனை வழிபட, விரதம் மேற்கொண்டு, சிவன் தலத்திற்கு சென்று வழிபட்டால் பேரும், புகழும் நிலைத்து நிற்கும் . இந்த மாத பௌர்ணமி தீபத் திருவிழாவாக விசே~மாக கொண்டாடப்படுகிறது.

 

🔯9. மார்கழி : மார்கழி மாதம் வரும் பௌர்ணமியில் ;விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும் உடல் நலம் சீராகும். நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்தால் க~;டங்கள் நீங்கும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதா சரவணன்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க