tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாக பஞ்சமி 8-8 2024

நாக சதுர்த்தி 9-8-2024

 

 

 

"பூமியில் வளைய வரும் நாகங்களுக்கு நமஸ்காரம் ஆகாயத்திலும் சொர்க்கத்திலும் வசிக்கும் 

நாகங்களுக்கு நமஸ்காரம். மாந்த்ரீகனுக்கு அம்பு போல் பயன்படுவது எதுவோ, மூன்று வித ஆத்மாவை முன்னிட்டு நிற்பது எதுவோ, வளைகளில் வசிப்பது எதுவோ அந்த நாகங்களுக்கு நமஸ்காரம். சுவர்க்கத்தில் பிரகாசத்தில் உறைவது எதுவோ, சூரியனின் கிரகணங்களில் விளங்குவது எதுவோ, நீரில் தன் இருப்பிடத்தை கொண்டது எதுவோ அந்த நாகங்களுக்கு நமஸ்காரம்." இப்படி யஜுர் வேதத்தில் நாகங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

யமுனையை விஷமாக்கிய காளியன் என்ற நாகராஜாவின் தலைமேல் நர்த்தனம் செய்து காளியனை கிருஷ்ண பகவான் அடக்கிய காளியமர்த்தனம் மறக்க முடியுமா? இந்த கதையில் யமுனை நதியிலிருந்து காளியனை விரட்டி நீரை சுத்தமாக்கியதோடு சாபத்தில் நாகமான காளியனுக்கு சாப விமோசனம் தருகிறார் கிருஷ்ண பகவான்.

 

தேவர்களும் அசுரர்களும் கைகோர்த்து மேரு மலையைக்

கொண்டுவந்து மத்தாக்கி வாசுகி என்ற நாகராஜனை கயிறாக்கி மலையைச் சுற்றி வளைத்து இருபுறமும் பிடித்துக் கொண்டு ஆழ்கடலை கடைந்தனர் அமிர்தம் பெறுவதே இதன் நோக்கம். 

இந்த அமிர்தத்தை பருகி தேவர்கள் தங்கள் இழந்த சக்தியை பெற விரும்பினார்கள். 

 

இமாசலப் பிரதேசத்தில் காங்டா பிரதேசத்திலும், காஷ்மீர் மலைச்சாரல்களிலும் சேஷநாகம் வாசுகி, கார்கோடான் போன்ற நாகராஜாக்களுக்கான கோயில்கள் நிறைந்துள்ளன.

 

சிவபெருமான் பாம்புகளிடம் அன்புடையவர். விஷப் பாம்புகளை அவர் தன் கழுத்தைச் சுற்றி மாலையாகவே அணிந்துள்ளார். பாற்கடலைக் கடைந்த நேரத்தில் பல உயர்ந்த பொருள்கள் வெளிவந்தன. அதன்பின் ஆலகாலம் எனும் கொடிய விஷம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து தன் வாயில் அடக்கி கொண்டார். வாயிலிருந்து அது கீழே போகாமலிருக்க தொண்டைக் குழியில் தங்க வைத்து விட்டார். அதனால் அவர்களுக்கு நீலமாகி நீலகண்டன் என்றே அழைக்கப்படுகிறார். கண்டம் என்றால் கழுத்து.

 

சர்ப்பம் ஒரு தலை உடையது நாகங்கள் பல தலைகள் உடையவை. சேஷன் அல்லது அனந்தன் நாகங்களின் தலைவனாக கருதப்படுகிறார். இவர் பூமியை தாங்குவதாக சொல்லப்படுகிறார்.

 

அனந்தனின் உடற் சுற்றுக்களால் ஆன படுக்கையில் பகவான் விஷ்ணு சாய்ந்து அமர்ந்திருக்கிறார். அந்த நாகராஜாவின் படங்கள் குடையாக விஷ்ணுவின் தலைக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் அனந்த

பத்மநாபசுவாமி ஆலயத்தில் மிகச் சிறந்த அழகிய வேலப்பாடக அமைந்த மஹாவிஷ்ணுவின் திருமூர்த்தி ஆதிசேஷனின் மேல் சாய்ந்தபடி கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்திலும் இத்தகைய சிலையை காணலாம்.

 

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மூத்த சகோதரரான பலராமன் ஆதி சேஷன் அவதாரமாகவும் இராமாயணத்தில் லஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்கள்.

 

பீமனுடைய நாகலோக பிரயாணத்தின் போது தாவரங்களிலிருந்து பிரிக்கப்பட்ட விஷம் மிருக விஷத்தினால் முறியடிக்கப்பட்டது. நளராஜா கலியினால் பீடிக்கப்பட்டபோது கார்கோடகப் பாம்பின் கடியினால் விடுபடுகிறான். மகாபாரதத்தில் ஹஸ்தினாபுர அரசனான பாண்டவ மன்னன் ஜனமேஜயன் பாம்பு யாகத்தை ஆரம்பித்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

 

 

க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்தி

ரி நகர்,

ஈரோடு - 638002.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க