tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ககனமும், வானும், புவனமும் காண, விற்காமன் அங்கம்

தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்

முகனும், முந்நான்கு இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின்

மகனும் உண்டாயது அன்றோ? வல்லி; நீ செய்த வல்லபமே

--------------------

ககனமும் = ஆகாயத்தில் உள்ள தேவகணங்களும், 

வானும் = வானத்தில் உள்ள தேவர்களும், புவனமும் = பூலோகத்தில் உள்ள மனிதர்களும், காண = பார்க்க, விற்காமன் = கரும்பு வில்லை உடைய மன்மதன், அங்கம் = உடலை, 

தகனம் = தன் நெற்றிக்கண்ணால் எரித்த, முன் செய்த தவப்பெருமாற்கு = முன்பு செய்த சிவபெருமானுக்கு, தடக்கையும் = நீண்ட கரங்களும், செம்முகனும் = சிவந்த முகங்களும், முந்நான்கு = 12 கரங்களும், இரு மூன்று = ஆறுமுகங்களும், எனத் தோன்றிய‌, மூதறிவின் = பேரறிவுடன்,

மகனும் உண்டாயது அன்றோ? = திரு குமாரனாக தோன்றிய முருகன் அல்லவா? , வல்லி நீ செய்த வல்லபமே = அபிராமவள்ளியாகிய நீ செய்த ஆற்றல்.

------------------------

ஒரு சமயம் சிவபெருமான் ஆழ்ந்த யோகநிலையில் இருந்தார். அதுசமயம் சூர பத்மன் அசுரர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். சூரபத்மனை சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் தோன்றக்கூடிய குமாரனால் மட்டுமே அழிக்க முடியும் என அறிந்தனர். கரும்பு வில்லை உடைய மன்மதன் சிவபெருமானது தவத்தை கலைக்கிறான். தவம் கலைந்ததால் கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக் கண்களால் அவனை எரிக்கிறார். மன்மதன் இல்லை என்றால் உலகில் ஜனனம் ஏற்படாது. ரதி தேவியின் வேண்டுதலுக்கு இணங்க மன்மதனுக்கு உயிர் கிட்டுகிறது.  

பின் பார்வதி சிவபெருமான் திருமணத்தால் முருகப்பெருமான் நீண்ட கரங்களும், சிவந்த முகங்களும் 12 தோள்களும், ஆறு திருகரங்களும், உடைய ஞான குழந்தையாக பிறக்கிறார். (கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய. ...... - கந்தபுராணம்). அவரால் சூரபதுமன் சம்காரம் செய்யப்படுகிறான். இது பார்வதி தேவியால் ஏற்பட்ட செயலாற்றல் அல்லவா?

 

சூர பதுமன் எரிக்கப்பட்டதும், சரவணப் பொய்கையில் கார்த்திகேயன் தோன்றியதும் சிவபெருமானுடைய நெற்றிக்கண்களால்தான். அவரது ஞானம் இருந்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பது திண்ணம்.

 

(தொடரும் /வளரும்) 

சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க