tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருநெல்வேலி அல்லது நெல்லை என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.

திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 

பெயர் விளக்கம்

16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப்படுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை 'நெல்வேலி' எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள் இது தவறானது

அந்தணர் ஒருவர் நெல்லையப்பர் சுவாமிக்கு சமைத்து படைப்பதற்காக நெல்லை வெய்யிலில் காய வைத்து விட்டு சென்றிருக்க மழை பொழிய ஆரம்பித்து விட்டது. பயந்தோடி வேகமாக வந்தவர் வியந்து போனார். இறைவன் அருளால் நெல்லைச் சுற்றி மழை பொழியாமல் வேலியிட்டார் போல காணப்பட்டது. இவ்வாறு இறைவன் நெல்லுக்கு வேலியிட்டதால் திரு என்னும் அடைமொழியுடன் திருநெல்வேலி ஆனது.

இந்த விளக்கத்தை நெல்லையப்பர் சுவாமி கோவிலிலும் காணலாம்.

பெயர்க் காரணம்

முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வோர் ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.

சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தன. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்குச் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லைக் காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காகக் காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே எனப் பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.

மன்னரும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது. 

ஓர் ஏழை விவசாயி இறைவனுக்குப் படைக்க நெல்லைக் காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரெனப் பெய்ய, சிவன் (நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர் என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.

இரட்டை நகரங்கள் 

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் (TWIN CITY) என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஓடுகின்றது. திருநெல்வேலி ஆனது ஆற்றின் மேற்குப் புறமும், பாளையங்கோட்டை கிழக்குப் புறமும் அமைந்துள்ளன.

பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

கல்வி

மாநில கீதமான "தமிழ்த் தாய் வாழ்த்தினைப்" பாடிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரில் இங்கு ஒரு பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அபிசேகப்பட்டியில் உள்ளது. பெரும்பாலான கிறித்தவப் பள்ளிகளும், கல்லூரிகளும் பாளையங்கோட்டையில் உள்ளன. திருநெல்வேலியில் 80 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 29 மேல்நிலைப் பள்ளிகளும், 12 உயர்நிலைப் பள்ளிகளும், 22 நடுநிலைப் பள்ளிகளும், 17 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன; திருநெல்வேலி மாநகராட்சி இவற்றில் 33 பள்ளிகளை நடத்துகின்றது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி, அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி ஆகிய தொழில்சார்ந்த கல்லூரிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றன. செ. சேவியர் கல்லூரி, செ. ஜான்ஸ் கல்லூரி கிறித்தவ டயோசிசின் அமைப்பினரால் நடத்தப்படுகின்றன. மேலும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி (பாரதியார் இங்கு படித்தார்), சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி குறிப்பிடத்தகுந்தவை.

இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் ஜியோமெகனடிசம் (IIG) அதன் பிராந்திய நிறுவனமாக, 'the Equatorial Geophysical Research Laboratory'-ஐ நிறுவி, மண்ணியல், வளிமண்டல மற்றும் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.[22]

திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இது பெங்களூரிலுள்ள விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின், துணைப்பிரிவு ஆகும். இங்கு நிரந்தரக் காட்சியகங்ளும், அறிவியல் காட்சிகளும், ஊடாடும் (Interactive) மற்றும் சுய வழிகாட்டுதல் (self-guided) சுற்றுலாவும், சிறியகோளரங்கம் மற்றும் வானிலைக்கூர்நோக்கும் மையமும் உள்ளன.

 

முக்கிய இடங்கள்

நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்தியமலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப்பிடிப்புகள் நடந்துள்ளன. பாபநாசத்தில், புகழ் பெற்ற அகத்தியர் அருவி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற குற்றால அருவித்தொடர் உள்ளது. இந்தக் குற்றால அருவி நெல்லையிலிருந்து 50கி.மீ. தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி, புலிஅருவி, பழைய குற்றாலம் எனப் பல அருவிகள் உள்ளன. மெயின் அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த அருவிக்கு மக்கள் வருகின்றனர்.

நெல்லையப்பர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் இந்த நகரில் அமைந்துள்ளது. ஸ்ரீ காந்திமதி-நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும், சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது. திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வழி கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் கோரக்க மகரிஷியால் வழிபட்ட தலம் ஆகும்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க