tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஒவ்வொரு பெரிய கோயிலிலும் பல விநாயகர்கள் 

எழுந்தருளியிருந்தாலும் தல விநாயகர் ஒருவர் இருப்பார்.

 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கிளி கூண்டு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சன்னதியில் முதன்மை வாயில் உள்ளது..தலத்திற்குரிய சித்தி விநாயகர் சன்னிதி இதன் வலது புறம் உள்ளது. மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் குதிரை வாங்க புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது. மதுரை விநாயகரின் நான்காவது படை வீடாகும்.

 

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மேலை கோபுரத்தின் நுழைவாயிலில் வடக்கு பக்கத்தில் கற்பக விநாயகர் சந்நிதி உள்ளது இது மூன்று மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும 3 மீட்டர் உயரமும் கொண்டதாகும். கற்பக விநாயகரை வணங்கிய பிறகு கோயிலினுள் செல்கிறோம்.

 

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சாமி சந்நிதி வழியாக கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் முதலில் நெல்லையப்ப விநாயகரை தொழுது செல்ல வேண்டும்.

 

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கிழக்கு கோபுர வாயிலில் உள்ள எதிர்ப்புற ம், வீதி வடங்க விநாயகர் கோயில் உள்ளது . உள்ளே வருவோர் முதலில் வழிபடுவது இந்த விநாயகரையே ஆகும்.

 

கும்பகோணம் ஆதி ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலின் இறைவனும் இறைவியும் இத்தலத்திற்கு வருவதை அறிந்த விநாயகர் ஆதியிலேயே இத்தலம் அடைந்து இறைவனை எதிர்நோக்கி காத்திருந்தார். இத்தல விநாயகர் ஆதி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படி வழியாக செல்வோர் முதலாவதாக மலை அடிவாரத்தில் உள்ள படி விநாயகர் கோயிலை வலம் வந்து மலை மேல் செல்லுவார்கள்.

 

பவானி சங்கமேஸ்வரர் ஆலய ராஜகோபுரத்தின் உள்ள முற்றத்தில் சிறிய கோபுரத்துடன் கூடிய ஒரு தனி கோயிலில் எழுந்தருளி உள்ள கோட்டை விநாயகரை வழங்கி உள்ளே செல்லலாம்.

 

சூரியனார் கோயிலில் பிரம்மனால் சாபம் பெற்ற நவக்கிரக நாயகர்கள் விநாயகர் நாயகர்கள் சாபம் பெற்ற நவக்கிரக நாயகர்கள் சூரியனார் கோயிலுக்கு வந்து தவம் செய்ய தொடங்ககும்போது சாபப்பிணியான கோள் நீங்கும் பொருட்டு இவ்விநாயகரை பிரதிட்டை செய்து வழிபட்டனர். அவர்கள் கோளை விநாயகர் தீர்த்து வைத்ததால் இவருக்கு கோள் தீர்த்த விநாயகர் என்று பெயர் உண்டாயிற்று. விநாயகரின் ஆலயம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஏகதள விமானத்தோடு கூடிய 

கருப்பகிரகத்தில் இவ்விநாயகர் கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.

 

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் சொர்ண வாறறி விநாயகர் தல விநாயகர் ஆவார்.

 

தில்லை நடராசர் கோயிலில் வெளிப்பிரகாரத்தின் வலப்பக்கமாக சென்றால் மேற்குக் கோபுரத்தை அடுத்துக் கற்பக விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இவ்விநாயகர் பெருமான் மேற்கு கோபுரத்தின் வெளிப்பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் இவரே 

தல விநாயகர்.

இவ் விநாயகர் பெருமான் ஏழு திருகரங்களோடு நர்த்தன கணபதியாக திருக்காட்சி அருள்கிறார். இவ் விநாயகர் துர்வாச முனிவர்களுக்கு இரவு சாம வேளையில் நடனம் செய்து காட்சியருளியவர். ஆகையால் நர்த்தன விநாயகராக காட்சி தருகிறார்.

 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் இரண்டாம் திருச்சிற்றுத் தென்மேற்கு மூலையில் வல்லப கணபதி வடக்கு நோக்கி காட்சி தருகிறார். வடக்கு முக வல்லப கணபதி குபேர வல்லப கணபதி என்ற பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்..

 

சுவாமிமலை சுவாமிநாத சாமியை கீழிருந்து மேலாகவோ மேலிருந்து கீழாகவோ வணங்கி வராமல் நடுவிலிருந்தே தொடங்க வேண்டும். காரணம் அங்கு தான் விநாயகர் இருக்கிறார். 60 படிகளில் பாதிப்படிகள் வந்ததும் 32 வது படியில் உயரே உள்ள இரண்டாம் திருச்சுற்றை அடையலாம் ‌. அதற்கு மேலும் படியேறினால் கண் கொடுத்த விநாயகர் இருக்கிறார்.அவரை முதன் முதலில் வணங்கியே நாம் வழிபாட்டை தொடர வேண்டும்.

 

திருச்சிராப்பள்ளி தாயுமானசாமி கோயிலில் நுழைவு வாயில் விநாயகராக மாணிக்க விநாயகர் திகழுகிறார்‌

 

மருதமலை மருதாசல மூர்த்தி கோயிலில் முன் மண்டபத்தை கடந்ததும் தான்தோன்றி விநாயகர் அமர்ந்திருக்கிறார். விக்னங்களை நாசம் செய்யும் விநாயகரை வணங்குகிறோம்.

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் தல விநாயகராக திகழும் இந்திர விநாயகர் கோபுர வாயிலை கடந்ததும் அருள் புரிகிறார்.

 

திருக்கருகானூர் முல்லைவன நாதர் சுவாமி ஆலயத்தில் தல விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார் . இவர் சுயம்பு மூர்த்தி.

 

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் விநாயகருக்கு மலை வழி விநாயகர் என்று பெயர்.

 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் தல விநாயகர் ஆபத்துக் காத்த விநாயகர்.

 

திருச்செந்தூர் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு செல்லும் வழியில் விநாயகர் கோயில் உள்ளது.தம் தம்பி சண்முகம் பெருமான் கோயில் கொண்டுள்ள இடத்தை தூண்டி காண்பித்துக் கொண்டிருப்பதால் இவருக்கு தூண்டுகை விநாயகர் எனப் பெயர்.

 

 

க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,

ஈரோடு - 638002.

ராசி பலன்

உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும்.  தவறிப்போன சில பொருட்கள் மீண்டும்... மேலும் படிக்க

எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கலைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும்... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த... மேலும் படிக்க

திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.... மேலும் படிக்க

முயற்சியில் அலைச்சலும் அனுபவமும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில... மேலும் படிக்க

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள்... மேலும் படிக்க

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயனற்ற... மேலும் படிக்க

மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய... மேலும் படிக்க