tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இது திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில், சென்னையில் இருந்து சுமார் 360 கி.மீ.தொலைவில்  இந்த நகரம் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பாக  காவிரி டெல்டாவின் தென்பகுதியில் உள்ளது. முத்துப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கில் முறையே கோரையாறு மற்றும் பாமணியாறு ஆறுகளால் எல்லையாக உள்ளது. கோரையாறு மற்றும் பாமணியாறு ஆகிய ஆறுகள் முத்துப்பேட்டை அருகே இணைகின்றன, இந்த ஊரின் சிறப்பே ஆண்டவர் ஷேக் தாவூத் கமில் ஒலியுல்லாவின் 700 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய ஆலயம் தான் இந்த  தர்கா பாரம்பரிய கட்டிடக்கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இந்த புனித தர்காவிற்கு ஜாதி, மதம், மத வேறுபாடின்றி  கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும்  பாகிஸ்தான் , பங்களாதேஷ் , இலங்கை , மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும்  வருகை தருகின்றனர் .இங்கு 14 நாட்கள் நடக்கும் கந்தூரி விழா பிரசித்தி பெற்றது.
இந்த தர்கா குறித்து கூறப்படும் வரலாறு வருமாறு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை இருந்தது. இதன் அருகே உள்ள ஒரு கிராமம் ஜாம்புவானோடை. கடந்த 1306-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி (ஹிஜ்ரி 727 ஜமாதுல் அவ்வல் மாதம் முதல் பத்து) அன்று ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா கோனார் என்பவர் விவசாயத்திற்காக ஏர் உழுது கொண்டிருந்தார்.
அப்போது ஏர் கொம்பு முனை பட்டு நிலத்தில் இருந்து ரத்தம் பீரிட்டு கருப்பையா கோனாரின் கண்களில் அடித்தது. இதனால் அவர் உடல் தளர்ந்து கண்ணொளி மங்கி தள்ளாடியவராக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஒருவித மன குழப்பத்துடன் அவர் இரவு உறங்கும்போது, அதுவரை பார்த்திடாத அழகிய அரபி தோற்றமுடைய பெரியவர் கனவில் தோன்றி, 'நீர் ஏர் உழுத இடத்தில் நான் வெகு காலத்திற்கு முன்பு அடக்கமாகி இருக்கின்றேன். என்னுடைய பெயர் ஷெய்குதாவூது என்பதாகும். உன்னுடைய இரு கண்களும் எல்லாம் வல்ல அல்லாவின் அருளால் மீண்டும் பிரகாசம் பெற்றுவரும் கவலைப்பட வேண்டாம். இங்கிருந்து 6 கல் தொலைவிலுள்ள நாச்சிகுளத்தில் வட புலத்தைச் சார்ந்த 2 பெரியவர்கள் கபீர்கான், ஹமீதுகான் ஆகிய இருவரிடம் சென்று நடந்ததை கூறி அவர்களை அழைத்து வந்து ஏர் உழுத இடத்தில் தெற்கு வடக்காக எனது தலைபாகத்திலும், கால் பாதத்தில் இரண்டு புஷ்பங்கள் இருப்பதை காண்பீர்கள் என்று கூறி ஜியாரத்தை கபுர் இருக்கும் இடத்தை அமைத்து விளக்கு ஏற்ற சொல் என கூறிவிட்டு அந்த மகான் மறைந்து விட்டார்கள்.இதையடுத்து அவர் கண்விழித்து பேரானந்தத்துடன் மகான் சொன்ன பெரியவர்களை சந்தித்து அழைத்து வந்து விளக்கேற்றி ஜியாரத் செய்தார்கள். அன்று முதல் எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன
இம்மாவட்டத்தின் இயற்கை அழகிற்கு முத்துப்பேட்டையில் அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள் காரணமாகிறன்றன. 1937 பிப்ரவரி மாதத்தில் முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக சென்னை மாகாண அரசினால் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு வனத்துறை இதனைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது.இது இயற்கை சதுப்புநில காடு , அலையாத்தி காடு, இந்தியாவிலேயே மிகப்பெரியது ஆர்க்கும். மீன்பிடித்தல், முத்து வேட்டை மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்கு ஒரு முக்கிய இடமாகும்.  கொடுவா, இறால் மற்றும் நண்டு ஆகியவை அதிகமாக கிடக்கிறது. 
இங்குள்ள அலையாத்தி காடு சிறப்பு வாய்ந்தது. அலையாத்தி காடுகளின் சிறப்புத் தன்மை, அங்குள்ள மரங்களின் சுவாச வேர்களாகும். இங்குள்ள மரங்களின் வேர்கள், நிலத்துக்கு அடியிலும், நிலத்திற்கு வெளியிலும் நிலைபெற்றிருக்கும். ஏனெனில் சதுப்பு நிலப் பகுதிகளில் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதற்காக வேர்கள் பூமிக்கு வெளியே தலை நீட்டுகின்றன. அந்த வேர்கள்தான், ஆக்சிஜனை உள்ளிழுத்து, மரங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உதவி புரிகின்றன. அலையாத்தி காடுகள் உள்ள பகுதிதான், அரிய வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.
2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பின்னர்தான், அலையாத்தி காடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மணலை இறுகச் செய்து, கடல் சீற்றம் ஏற்படும் வேளையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு.
இங்குள்ள  மாரியம்மன் சன்னதியும், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது.
-

எஸ்.ரவீந்திரன்  சென்னை -56

ராசி பலன்

உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும்.  தவறிப்போன சில பொருட்கள் மீண்டும்... மேலும் படிக்க

எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கலைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும்... மேலும் படிக்க

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த... மேலும் படிக்க

திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.... மேலும் படிக்க

முயற்சியில் அலைச்சலும் அனுபவமும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில... மேலும் படிக்க

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள்... மேலும் படிக்க

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயனற்ற... மேலும் படிக்க

மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய... மேலும் படிக்க