tamilnaduepaper
❯ Epaper

முதிர் கன்னி

முதிர் கன்னி
Join Whatsapp Channel Join Telegram Channel

ராஜாவும் மைதிலியும் பால்ய நண்பர்கள்.இருவரின் வீடும் அருகருகே அமைந்திருக்க, தினமும் பள்ளிக்கு ஒன்றாக சென்று ஒன்றாக வருவார்கள். ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாக படித்தவர்கள், உயர்கல்விக்கு வெவ்வேறு பள்ளிகளில் சேர்ந்தார்கள். ஆனாலும் ஒன்றாக பயணம் செய்து பள்ளி வருமிடத்தில் பிரிந்திடுவார்கள். மைதிலி சற்று கருமை நிறத்தில் இருப்பாள். அதனால் அடிக்கடி ராஜா அவளை

 "கருப்பி சாப்பிட்டியா"

 "கருப்பி ஹோம்வொர்க் முடிச்சிட்டியா" 

என்றுதான் கேட்பான். அவளும் சிரித்துக்கொண்டே பதில் சொல்வாள். ஆனால் ராஜாவோ, அதற்கு நேர்மாறாக நல்லநிறம். ஒருநாள் ராஜா பள்ளிக்கு வரவில்லை.அடுத்த நாள் வந்தபோது " "ஏன்டா செவப்பா நேத்து வரல" 

"காய்ச்சல்...கருப்பி, அதான் வரல" 

"இப்போ எப்படி இருக்கு செவப்பா" 

" பரவாயில்ல கருப்பி" இப்படி பேசிக்கொண்டே சென்றார்கள். ஆண்டுகள் உருண்டோடின. இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டார்கள். 

 

           ராஜா வேறு மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து விட்டான். ஆனால் மைதிலி குடும்பமோ ஏழ்மையான குடும்பம். அதனால் அவளை மேற்கொண்டு வீட்டில் படிக்க வைக்கவில்லை. நல்ல வரன் வந்தால் கட்டிக் கொடுத்து விடலாமென்று அவளது பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

 "மைதிலி இங்க வா"

 "என்னம்மா,சொல்லும்மா"

"வீட்லயே சும்மா இருந்து என்ன பண்ணப்போற, உங்க அப்பாவுக்கும் உடம்பு சரியில்ல, அதனால இனிமேல் நீயும் என்கூட கூலி வேலைக்கு வா, போகலாம்" 

"சரிம்மா, வரேன்" . 

அடுத்த நாள் முதல் அம்மாவுடன் சேர்ந்து வேலைக்குச் செல்ல தொடங்கினாள். காட்டிலும், மேட்டிலும் வெயில் மழை பாராமல் வேலை செய்து மேலும் கருத்துப்போனாள்.

 

            பொண்ணு பார்க்க வருபவர்கள் எல்லாரும், மைதிலியின் நிறத்தையும், வறுமையையும் காரணம் காட்டி பிடிக்கவில்லை என்று கூறி சென்று விடுவார்கள். மைதிலி மனம் கலங்கிபோவாள். வலியையும் வேதனையையும் தாங்கி கொண்டு நாட்களை நகர்த்தி சென்றாள். எப்போதும் போல வேலைக்குச் செல்லும் வழியில் " மைதிலி என்னடி,நல்லாயிருக்கியா" என்று குழந்தையுடன் வந்த நந்தினி கேட்க

" ம்ம்.ஏதோ இருக்க" என்று சொல்ல,

 "ஏண்டி இவ்வளவு கஷ்டமா சொல்ற, சீக்கிரமா உனக்கும் நல்ல மாப்பிள்ளை அமைவாரு,கவலைப்படாதென்று" 

ஆறுதல் கூறி விடைபெற்றாள். மைதிலியின் இதயத்தைச் சோகம் சூழ, "அம்மா, நான் இனிமேல் வேலைக்கு வரல, நீ போயிட்டு வா" என்று கூற,மகளின் வலியை உணர்ந்துகொண்ட தாயும் அவளுடன் சேர்ந்து மீண்டும் வீட்டிற்கே திரும்பிவிட்டார்கள். அன்றிலிருந்து அவமானம் தாங்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தாள்.யார் சொல்லியும் கேட்கவில்லை. 

 

            திடீரென ஒருநாள் ராஜா மைதிலியைப் பார்க்க வருகிறான். மைதிலியின் அம்மா, நடந்ததையெல்லாம் ராஜாவிடம் கூற மனம் உடைந்து போனான். மைதிலியின் அறைக்கதவை தட்டி,

" மைதிலி, நான் ராஜா வந்திருக்கேன்,கதவ திற" என்றான். அவள் கதவைத் திறக்கவே இல்லை. " மைதிலி, நான் காலேஜ்ல படிச்ச செல்வியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆரம்பத்துல எங்க வீட்ல யாருமே அத ஏத்துக்கல, இப்போதான் நெலம சரியாச்சு. அதனால தான் இத்தன வருஷமா ஊருக்கு வர முடில" அது மட்டுமில்ல எனக்கு ரெண்டு குழந்தைங்க, நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போறோம்" என்று சொல்வதையெல்லாம் கதவினருகே வந்துநின்று ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 " நாங்க அனாதை இல்லம் ஒன்னு வச்சிருக்கோம். 50 குழந்தைங்க மேல இருக்காங்க, அத சூப்பர்வைஸ் பண்ண 10000 சம்பளம் கொடுத்து ஒரு ஆள் வச்சிருந்தோம்.இப்போ அவுங்க வேற வேலை கிடைச்சிருச்சுன்னு சொல்லி போயிட்டாங்க. இதோ அட்ரஸ் கார்டு, 

அம்மாகிட்ட குடுத்துட்டுப் போற, உனக்கு விருப்பம்னா வந்து சேர்ந்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

         ஒரு வாரம் சிந்தித்த பிறகு, கதவைத் திறந்து வெளியே வந்த மைதிலியைப் பார்த்து அவளது அம்மாவும், அப்பாவும் மகிழ்ச்சியடைய,"அம்மா,ராஜா கொடுத்த அட்ரஸ் கார்டு எங்கம்மா" "ஐன்னல் கிட்ட இருக்கு பாரும்மா" என்றதும், அதை எடுத்துப் பார்த்துவிட்டு" அம்மா நான் நாளைக்கே, ராஜாவோட அனாதை இல்லத்தைப் பாத்துக்க போறம்மா" "சரிம்மா, ரொம்ப சந்தோஷம்மா, போயிட்டு வாம்மா" என்றாள். 45 வயதைக் கடந்த முதிர்கன்னியான மைதிலி தற்போது ராஜா அனாதை இல்லத்தில்.

அவளைச் சுற்றி 50 குழ்ந்தைகள், "அம்மா, அம்மா" என்றழைக்க தாய்மையின் ஸ்பரிசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

 

                                                    பாக்யபாரதி 

                                                         தருமபுரி

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க