tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஆரணி, மே 24

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கிழ்ப்பட்டு கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை, வாராகி துர்கையம்மன், ஐய்யப்பன், மற்றும் பரிகாரமூர்திகள், உள்ளிட்ட சிலை நிறுவப்பட்டன. இக்கோவிலை பொதுமக்களின் பங்களிப்போடு புணரமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டி கும்பாபிஷேகம் விழா மிகச் சிறப்பாக நடந்தது.

கணபதிபூஜை, வாஸ்து பூஜை, கோபூஜை துவங்கியதில் 1008 கலசங்களை வைத்து புனித கங்கையில் இருந்து கொண்டு வந்த புனித தீர்த்தங்களை பூஜையில் வைத்து 5 கால பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி அக்னி எழுப்பி வழிபட்டனர். பின்பு பூஜிக்கப்பட்ட கலசங்களை மங்கள இசை உடன் மேளதாளத்தோடு ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவில் மேல் உள்ள கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்பு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனை தரிசித்து அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சிவா, அறங்காவலர் குழு தலைவர் கே.வி.சேகரன், சேத்துப்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் ராணி அர்ஜுனன், அதிமுக மக்களவை வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன், ஆரணி நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு, திமுக சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கீழ்ப்பட்டு செங்குந்தர் சங்கத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், செங்குந்த மரபினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க