tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாகர்கோவில், அக். 26–
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடைவிடாமல் பெய்த  கனமழை  காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.  அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் தாமிரபரணி மற்றும் கோதையாற்றின் கரை ஓரபகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 நாகர்கோவிலில் தேங்கிய மழைநீர், அவசர அவசரமாக வடிகால்களை சீரமைத்து வெளியேற்றினர்.
     நாகர்கோவில் கன்னியாகுமரி மயிலாடி போன்ற பகுதிகளில்   

நேற்று முன்தினம் பரவலான மழை பெய்த போதிலும் குலசேகரம், கோதை யாறு மற்றும் மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டது.   நாகர்கோவில், கீரிப்பாறை, பூதப்பாண்டி, தக்கலை, மயிலாடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை நேற்று முழுவதும் இடைவிடாமல் பெய்தது. 

இதன் காரணமாக பழைய ஆறு, தாமிரபரணி ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு போன்ற பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
    
    
பாலமோர், காளிகேசம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மலைப்பகுதி எஸ்டேட்டுகளில் குடியிருப்போர் மலைப்பகுதிக்கு செல்ல முடியாமலும் அங்கு இருந்து கீழே இறங்க முடியாமலும் தவித்தனர். இதனால் காளிகேசம்– கீரிப்பாறை இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பால் வெட்டு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.  தனியார் மற்றும் அரசு ரப்பர் தோட்டங்களில் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

 
 புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பெரும்பாலான கடலோர கிராமங்களில் கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகள் கடற்கரை ஓரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 
மாநகராட்சி
      

 நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. டென்னிசன் சாலை, வெட்டுர்ணிமடம், வடிவீஸ்வரம், போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன் மழை காரணமாக பெருமளவு தண்ணீர் தேங்கியது.  அந்த தண்ணீர் வடிகாலாக பாய்ந்து டென்னிசன் சாலையில் நிரம்பியது.  மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்தப் பகுதியில் முகாமிட்டு கழிவுநீர் ஓடைகளை தோண்டி விரிவுபடுத்தி வருகின்றனர். இதனால் டென்னிசன் சாலையில் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.

 தொடர் மழையால் குமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க