tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மயிலாடுதுறை , நவ , 25 -
மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவிப்பங்குதந்தை 
ஜோ கிளமெண்ட் பவனியை வழிநடத்தினார். தஞ்சாவூர் ஏழுப்பட்டி ஜெபத்தோட்ட அதிபர் பேரருட்திரு.மிக்கேல் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “ஆடம்பரம் துறந்து ஆண்டவரின் அழைப்பை ஏற்றவர்” என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியை அமல அன்னை அன்பியக் குழுவினர், புனித சேவியர் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியினர் பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.
இத்திருப்பலியில், உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற்குழுவினர்,  பலிபீட சிறுவர்கள் மற்றும் இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் விழாக் குழுவினர் மற்றும் பங்கு மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப்... மேலும் படிக்க