tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, நவ. 25–
பாஜவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை மகாராஷ்டிரா வெற்றி உணர்த்துகிறது என திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வருமாறு:
கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான  இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள பிரியங்கா காந்திக்கும்,   ஜார்கண்ட் மாநிலத்தின்ல்: மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
    வயநாடு இடைத்தேர்தலில்  ராகுல் காந்தி பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியும் பிரியங்கா  ஈட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒன்றிய பாஜ அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. குறுக்கு வழியில் அவரது முதலமைச்சர் பதவியைப் பறித்தது. இந்தச் சதிகளையெல்லாம்  தாண்டி  மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் மகத்தான தலைவரான ஹேமந்த் சோரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவலம்
 மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதிகளிலும்  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும்,  பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான விபிஏ  கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின.  பாஜ கூட்டணி,  காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் "பாஜவுக்கு ஆதரவாகத் தலித் வாக்குகளைப் பிரிப்பதற்குத் தான் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்" என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது. இது அறிந்தோ அறியாமலோ பாஜ வுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் பாஜவே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது. “ இந்த வெற்றி மோடி, -அமித்ஷா-, அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். 
ஒருங்கிணைப்பு தேவை
ஏனெனில், அங்கு நாண்டேட் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் பாஜ வென்றுள்ளது.இது ‘மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், இம்முடிவு பாஜவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை  எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது. 
 இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப்... மேலும் படிக்க