tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 8 –

விமான சாகச நிகழ்வில் ஐந்து பேர் உயிரிழந்ததற்கு வெயிலின் தாக்கமே காரணம். கூட்ட நெரிசல் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் காலநிலை மாற்றம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஒரு நாள் கருத்தரங்கிற்கான மலரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

 மெரினா விமான சாகசத்தின்போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறவில்லை. விமானப்படை சாகசத்தின்போது இறப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இறந்தோருக்கு அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம். இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர். உயிரிழந்த 5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

வெயில் தாக்கமே காரணம்

மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பலனின்றி யாரும் இறக்கவில்லை. 5 மரணமும் வெயிலின் தாக்கத்தாலே ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், கால் முறிவு, மூச்சுத் திணறல், குடலிறக்கம், செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 

பொது மக்களுக்கு தேவையான அனைத்தை வசதிகளையும் அரசு செய்திருந்தது. மெரினாவுக்கே வராமல், பூதக் கண்ணாடி வைத்து குறை சொல்லும் சில நக்கீரர்கள்தான் அரசை குறை சொல்கின்றனர். தட்ப வெப்ப நிலையை பொறுத்து விமான சாகச நேரத்தை விமானப்படைதான் முடிவு செய்திருந்தது. விமானப்படையை குறைகூற முடியாது. வெயிலின் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை.

அனைத்து வசதிகள்

இந்திய விமானப்படை தனது பலத்தை காட்டுவதற்கு சென்னையை தேர்வு செய்ததும், தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து விமானப்படையினர் கேட்ட அனைத்து வசதியையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது. இந்திய ராணுவத்தின் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் பல்வேறு மருத்துவக் குழுக்கள் மெரினாவில் இருந்தனர். அவசர உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் மெரினாவில் தயார் நிலையில் இருந்தன. ஆயிரக்கணக்கான பாரா மெடிக்கல் குழுவினர் பணியில் இருந்தனர்.

 அரசு மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்குமாறு விமானப்படை கூறியிருந்தது. அதன் அடிப்படையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஆகியவற்றில் படுக்கைகள் தயார் நிலையில் இருந்தன. மேலும், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை மற்றும் தண்ணீர் எடுத்து வருமாறும் , கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்து வருமாறும் விமானப்படை கூறியிருந்தது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க